24-8-2019-newstm-daily-astrology
கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
24-Aug-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது ஆவணி - 07
சனிக்கிழமை
நவமி மறு நாள் காலை 3.50 மணி வரை. பின் தசமி
ரோகிணி இரவு 12.57 மணி வரை பின் மிருக சீரிஷம்
அமிர்த யோகம்
நாமயோகம்: வ்யாகாதம்
கரணம்: தைதுலம்
அகஸ்: 30.43
த்யாஜ்ஜியம்: 26.56
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 4.05
சூரிய உதயம்: 6.07
ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
பாஞ்சராத்திர ஜெயந்தி.
பிள்ளையார்பட்டி தேரெழுந்தூர், திண்டுக்கல் தேவகோட்டை மிலட்டூர், உப்பூர் இத்தலங்களில் ஸ்ரீவிநாயகப் பெருமான் உற்ஸவாரம்பம்.
இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்
சூரியன்
மகம் 2ம் பாதம் - ஆட்சி
சந்திரன்
ரிஷபம் - உச்சம்
செவ்வாய்
மகம் 3ம் பாதம் - பகை
புதன்
மகம் 2ம் பாதம் - பகை
குரு
கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன்
மகம் 3ம் பாதம் - பகை
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு
மேஷம்: கிரகநிலை: தனஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து அதனால் வெற்றி பெறுவீர்கள். மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9ரிஷபம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுகஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தர்ரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த பயணங்கள் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். மேலிடத்தின் கனிவான பார்வையால் குதூகலம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6கடகம்: கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6சிம்மம்: கிரகநிலை: ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - சுகஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். வீடு மனை சார்ந்த முயற்சிகள் எடுக்கும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - விரையஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நன்மையான நாளாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரியும் நபர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல் துறையினர் புதிய முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று ரகசியங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - ரண ருண ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிலும் அதிக சிரத்தை எடுப்பது நன்மை தரும். மன அமைதி உண்டாகும். காலம் தவறாத பேச்சினால் அனைவரிடமும் நற்பெயர் வாங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9மகரம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 கும்பம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6மீனம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6
newstm.in