1. Home
  2. ஜோதிடம்

24-8-2018 தினப்பலன் - 4 ராசிக்காரர்களுக்கு லாபமான நாள் இன்று!

24-8-2018 தினப்பலன் - 4 ராசிக்காரர்களுக்கு லாபமான நாள் இன்று!

24-8-2018-newstm-daily-free-astrology

24-8-2018 தினப்பலன் - 4 ராசிக்காரர்களுக்கு லாபமான நாள் இன்று!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

ளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I ஆவணி 08 I இங்கிலீஷ்: 24 August 2018 I வெள்ளிக்கிழமை

த்ரயோதசி பகல் 2.13 மணி வரை. பின் சதுர்த்தசி I உத்திராடம் காலை 8.59 மணி வரை. பின் திருவோணம்

சௌபாக்யம் நாமயோகம் I தைதுலம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 18.12

அகசு: 30.43 I நேத்ரம்: 2 I ஜீ வன்: 1 I சிம்ம லக்ன இருப்பு: 7.45 I சூர்ய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று மேல் நோக்கு நாள் I திருவோண விரதம் I வரலட்சுமி விரதம் I சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம் I திதி: அதிதி I சந்திராஷ்டமம்: புனர்பூசம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களைப் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங் கள்!

மேஷம்  கிரகநிலை:  சுக ஸ்தானத்தில் புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9 ஆவணி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யுங்கள்...ரிஷபம்  கிரகநிலை:  தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ராகுவால் வரக்கூடிய நோய்கள்... சங்கடங்கள் என்ன தெரியுமா?!மிதுனம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 இதைப் படிச்சீங்களா?  உங்கள் நட்சத்திரத்தை கிளிக் செய்யுங்கள்... நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்! பகுதி - 2கடகம்  கிரகநிலை:  ராசியில் புதன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 இன்றைக்கு வரலட்சுமி விரதம்... எப்படி பூஜை செய்யனும்னு தெரியுமா?சிம்மம்  கிரகநிலை:  ராசியில் சூர்யன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று எதிலும் சாதகமான நிலை காணப்படும். ஆனாலும் சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 இதைப் படிச்சீங்களா? அஜித் - விஜய் ரசிகச் சண்டை... இரு துருவங்கள் - | அபத்தமும் அதீதமும்கன்னி  கிரகநிலை:  ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7துலாம்  கிரகநிலை:  ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 இதைப் படிச்சீங்களா? வரலட்சுமி விரதம் உருவான கதை!விருச்சிகம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று யாருக்கும் உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9தனுசு  கிரகநிலை:  ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7மகரம்  கிரகநிலை:  ராசியில் சந்திரன், செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கும்பம்  கிரகநிலை:  ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3மீனம்  கிரகநிலை:  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும் போதும் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

newstm.in

Trending News

Latest News

You May Like