24-10-2018 தினப்பலன் -இன்று பணவரத்து கூடும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்!

24-10-2018 தினப்பலன் -இன்று பணவரத்து கூடும்.
X

24-10-2018-newstm-daily-free-astrology

24-10-2018 தினப்பலன் -இன்று பணவரத்து கூடும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் Iசரத்ருது I ஐப்பசி 07I இங்கிலீஷ்: 24 October 2018 I புதன்கிழமை

பௌர்ணமி இரவு 10.58 மணி வரை. பின் பிரதமை I ரேவதி காலை 10.34 மணி வரை. பின் அசுபதி

ஹர்ஷணம் நாமயோகம் I பத்ரை கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: -அகசு: 29.16 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1I துலாம் லக்ன இருப்பு: 7.43 I சூர்ய உதயம்: 6.07

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று சமநோக்கு நாள் I பௌர்ணமி Iஆக்கிரயணம் Iகோமதி பூஜை
திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் உற்ஸவாரமபம் I திருமூலநாயனார் குருபூஜை

திதி: பௌர்ணமி I சந்திராஷ்டமம்: ஹஸ்தம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு, புதன்   - பாக்கிய ஸ்தானத்தில் சனி  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரத்து கூடும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் இருக்கும். எதிர் பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். அதனால் செலவும் ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - களத்திர ஸ்தானத்தில் குரு, புதன்   - அஷ்டம ஸ்தானத்தில் சனி  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வழக்கத்தை விட பணிசுமை  கூடும். குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணிகளை கவனிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6மிதுனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, புதன்   - களத்திர ஸ்தானத்தில்  சனி  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,2 தினம் ஒரு மந்திரம் – ராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கா மங்கள சண்டிக ஸ்தோத்ரம்கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, புதன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி  - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்களால் நன்மை உண்டாகும். மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பதால் நன்மை உண்டாகும்.  மதிப் பெண் கூடும். வீண் அலைச்சல் காரிய தாமதம் உண்டாகலாம்.  கவனமாக செயல்படுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6சிம்மம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - சுகஸ்தானத்தில் குரு, புதன்   - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின்  அறிமுகம் ஏற்படும்.  திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். மனக்கவலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5கன்னி: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, புதன்   - சுக ஸ்தானத்தில் சனி  - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.  புதிய ஆர்டர்கள் தொடர்பாக  அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செய்வது நல்லது.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 9, 3 அங்காரகன் (செவ்வாய்) பயோடேட்டாதுலாம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன்(வ), சூர்யன்   - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, புதன்   - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும்.  கணவன், மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். பிள்ளைகளிடம் மென்மையாக  நடந்து கொள்வது நல்லது. எந்த காரியத்தையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 2, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு, புதன்   - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி  -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையாக செயல் பட்டாலும் காரிய தாமதம் உண்டாகும். பணவரத்து இருக்கும்.  எதிர்பார்த்த உதவிகள் உறவினர் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6தனுசு: கிரகநிலை: ராசியில் சனி  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுகஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வாக்கு சாதூரியத்தால் நன்மை கிடைக்கும். எதையும் யோசித்து செய்வீர்கள். பயணம் மூலம் சாதகம் உண்டாகும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான நிதி வசதி பெருகும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான  திட்டங்கள்  பற்றி ஆலோசிப்பீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 5, 6 புண்ணியம் தரும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - லாப ஸ்தானத்தில் குரு, புதன்   - அயன சயன போக ஸ்தானத்தில் சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் உங்களது மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையில்  மகிழ்ச்சியான நிலை இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களின் அன்பை பெறுவீர்கள். எதையும் யோசித்து செய்வது நன்மைதரும். பயணங்களினால் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,2கும்பம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), சூர்யன்   - தொழில் ஸ்தானத்தில் குரு, புதன்   - லாப ஸ்தானத்தில் சனி  - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் கிடைக்கும். சக மாணவர்களிடையே மதிப்பு உயரும். காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். எல்லாவற்றிலும் ஒரு பயம் உண்டாகும். தூக்கம் குறையும். மற்றவர்களிடம் பகை ஏற்படாவண்ணம்  கவனமாக நடந்து கொள்வது நல்லது. பணவரத்து அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்    அதிர்ஷ்ட எண்: 2, 3மீனம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ), சூர்யன்   - பாக்கிய ஸ்தானத்தில் குரு, புதன்   - தொழில்  ஸ்தானத்தில் சனி  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் மந்தமாக இருக்கும்.  பொருளாதார திட்டங்களில் அவசரம் காட்டாமல் நிதானமாக யோசித்து செய்வது நல்லது.  வரவேண்டிய பணத்தை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 2, 3

newstm.in

Tags:
Next Story
Share it