1. Home
  2. ஜோதிடம்

23-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. கையிருப்புப் பொருட்கள், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்


23-12-2019-newstm-dwstm-daily-astrology

23-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. கையிருப்புப் பொருட்கள், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி - 07
திங்கட்கிழமை

துவாதசி பகல் 2.17 மணி வரை. பின் திரயோதசி
விசாகம் மாலை 6.35 மணி வரை பின் அனுஷம்
மரண யோகம்
நாமயோகம்: ஸுகர்மம்
கரணம்: தைதுலம்

அகஸ்: 28.25
த்யாஜ்ஜியம்: 39.53
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 4.14
சூரிய உதயம்: 6.31

ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்


குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
பிரதோஷம்.
சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள் திருகோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.


திதி: திதித்துவயம்
சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி


சூரியன் மூலம் 3ம் பாதம் - நட்பு
சந்திரன் விருச்சிகம் - நீசம்
செவ்வாய் விசாகம் 3ம் பாதம் - நட்பு
புதன் மூலம் 1ம் பாதம் - நட்பு
குரு மூலம் 4ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் உத்திராடம் 4ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -   களத்திர ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் -  பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ   -   ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய்  -  அஷ்டம ஸ்தானத்தில்   சூர்யன், புதன்,  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  கிரகநிலை: ராசியில்  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். உங்கள் குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய்  -   பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.‘ அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம். உறுதியான எண்ணத்துடன் பணியாற்றுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: ராசியில் சந்திரன், செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் -   அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும்.   அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன், குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  ராஹு -  லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான நேரமிது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  கிரகநிலை: ராசியில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய் -   அயன, சயன,  போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் ஏதேனும் சண்டை சச்சரவுகள் வந்தால் அதனைப் பெரிதாக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். சிலர் தேடி வந்து உதவுவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று பகல் 12.47 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். இதுவே அதற்கு ஏற்ற காலமாகும். புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பது நலம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9   

newstm.in

Trending News

Latest News

You May Like