23-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும் போது கவனம் தேவை.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்

23-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும் போது கவனம் தேவை.
X

23-12-2018-newstm-daily-astrology

23-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும் போது கவனம் தேவை.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் Iதக்ஷிணாயணம்Iஹேமந்தருதுIமார்கழி 08Iஇங்கிலீஷ்: 23 December 2018 Iஞாயிற்றுக்கிழமை

ப்ரதமை இரவு 10.30 மணி வரை பின் திவிதீயை Iதிருவாதிரை இரவு 11.24 மணி வரை பின் புனர்பூசம்

சுப்ரம் நாமயோகம் Iபாலவ கரணம் Iசித்த யோகம்

தியாஜ்ஜியம்: 5.18 Iஅகசு: 28.26 Iநேத்ரம்: 2 Iஜீவன்: 1I தனுசு லகன் இருப்பு: 8.10 I சூர்ய உதயம்: 6.31

ராகு காலம்: மாலை 4.30 - 6.00 Iஎமகண்டம்: மதியம் 12.00 - 1.30 Iகுளிகை: மதியம் 3.00 - 4.30 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:இன்று மேல் நோக்கு நாள் Iஆருத்ரா தரிசனம் Iதிருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் தாமிர சபா நடனம்.

திதி: பிரதமை Iசந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3ரிஷபம்: இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6மிதுனம்: இன்று அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2019 -எண்ணியது இனிதாய் நடக்கப் போகும் 2019 ஆம் புத்தாண்டுகடகம்: இன்று மனதில் உற்சாகம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிட்டும். பணகஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். சொத்து மனை வீடு சம்பந்தமான காரியங்களில் தாமதம் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7சிம்மம்: இன்று அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்ய திட்டமிடுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கன்னி: இன்று பணி நிமித்தமாக பிரயாணம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 சர்வத்தையே காக்கும் சர்வேஸ்வரனின் ஆருத்ரா தரிசனம் (23.12.2018)துலாம்: இன்று எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலை பளு குறையும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9விருச்சிகம்: இன்று அரசியல்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9தனுசு: இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பம் நீங்கி நண்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்மகரம்: இன்று நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கும்பம்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9மீனம்: இன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். பெரியோர்களிடம் ஆலோசனைகளைப் பெறுவது சிறந்தது. மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

newstm.in

Tags:
Next Story
Share it