1. Home
  2. ஜோதிடம்

23-10-2018 தினப்பலன் - இந்த இரண்டு ராசிக்காரர்களும் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது

23-10-2018 தினப்பலன் - இந்த இரண்டு ராசிக்காரர்களும் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது

23-10-2018-newstm-daily-free-astrology

23-10-2018 தினப்பலன் - இந்த இரண்டு ராசிக்காரர்களும் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது I ஐப்பசி 06 I இங்கிலீஷ்: 23 October 2018 I செவ்வாய்க்கிழமை

சதுர்த்தசி இரவு 10.54 மணி வரை. பின் பௌர்ணமி I உத்திரட்டாதி காலை 9.38 மணி வரை. பின் ரேவதி

வ்யாகாதம் நாமயோகம் I கரஜை கரணம் Iஅமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 39.58 I அகசு: 29.17I நேத்ரம்: 2 I ஜீவன்: 1I துலாம் லக்ன இருப்பு: 7.46 I சூர்ய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று மேல் நோக்கு நாள் I கரிநாள் I கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் உற்ஸவாரமபம்

திதி: சதுர்த்தசி I சந்திராஷ்டமம்: உத்திரம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு  - பாக்கிய ஸ்தானத்தில் சனி  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர் பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்களால் முன்னேற்றம் கிடைக்கும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.  முக்கிய நபர்களின் உதவியும் அவசியமான நேரத்தில் ஆலோசனையும் கிடைக்க பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - களத்திர ஸ்தானத்தில் குரு  - அஷ்டம ஸ்தானத்தில் சனி  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் எதிர்பார்த்த இடங்களில்  இருந்து வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலை தொடர்பாக பயணம் செல்ல நேரலாம். அலைச்சல் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7மிதுனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில்  சனி  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சுமூகமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனகசப்பு மாறும்.  பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ஏன் தெரியுமா ? - ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டாயம் அணிய வேண்டுமா?கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி  - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தேவையான நேரங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தேக்க நிலை மாறி ஆர்வமுடன் சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9சிம்மம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - சுகஸ்தானத்தில் குரு  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மரியாதையும், அந்தஸ்தும் கூடும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். திடீர் கோபம் வரலாம். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் மனோ தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். எந்த சிக்கலும் வராமல் இருக்க தீர ஆலோசனை செய்து முடிவுகள் எடுப்பீர்கள்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கன்னி: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு  - சுக ஸ்தானத்தில் சனி  - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் திறமை வெளிப்பட்டு அதனால்  பாராட்டும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும் ?துலாம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. கோபத்தை குறைத்துக் கொண்டு எல்லோரிடமும் நிதானமாக பேசுவது பிரச்சனை வராமல் தடுக்கும். மனோபலம் கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி  -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்று கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்தரும். திறமை வெளிப்படும். வீண் அலைச்சல், காரியதாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7தனுசு: கிரகநிலை: ராசியில் சனி  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுகஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - அயன சயன போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். தடை, தாமதம் ஏற்பட்டாலும் எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.  பயணங்கள் செல்ல நேரலாம். அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும் போது கவனமாக இருப்பது வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 தினம் ஒரு மந்திரம் – பாபங்கள் நீக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - லாப ஸ்தானத்தில் குரு  - அயன சயன போக ஸ்தானத்தில் சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.  பழைய பாக்கிகள் வசூலாகலாம். மேலும் புதிய ஆர்டர்கள் வருவது, புதிய வாடிக்கையாளர்கள்  வருவதும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு இல்லாதது போல்  தோன்றினாலும் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கும்பம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - தொழில் ஸ்தானத்தில் குரு  - லாப ஸ்தானத்தில் சனி  - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும்.  கணவன், மனைவிக் கிடையே  ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தரும்.  பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9மீனம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - பாக்கிய ஸ்தானத்தில் குரு  - தொழில்  ஸ்தானத்தில் சனி  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி, பாடங்களை நம்பிக்கையுடன் படிப்பீர்கள். சகமாணவர்களிடம்  கவனமாக பழகுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

newstm.in

Trending News

Latest News

You May Like