1. Home
  2. ஜோதிடம்

23-07-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.

23-07-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.

23-07-2019-newstm-daily-astolofy

23-07-2019 தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

23-Jul-19 விகாரி வருஷம்
தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது
ஆடி - 07 செவ்வாய்கிழமை

சஷ்டி பகல் 2.03 மணி வரை. பின் ஸப்தமி
உத்திரட்டாதி பகல் 11.50 மணி வரை பின் ரேவதி
அமிர்த யோகம்
நாமயோகம்: அதிகண்டம்
கரணம்: வணிஜை

அகஸ்: 31.19
த்யாஜ்ஜியம்: 46.54
நேத்ரம்: 2
ஜீவன்: 0
கடக லக்ன இருப்பு (நா.வி): 4.23
சூரிய உதயம்: 6.03


ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
நத்தம் ஸ்ரீமாரியம்மன் பூந்தேரில் பவனி.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

திதி: அதிதி
சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

சூரியன் பூசம் 1ம் பாதம் - பகை
சந்திரன் மீனம் - நட்பு
செவ்வாய் ஆயில்யம் 1ம் பாதம் - நீசம்
புதன் திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
குரு கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன் புனர்பூசம் 3ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 1ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 3ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - சுகஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ)  - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6  ரிஷபம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9  மிதுனம்: கிரகநிலை: ராசியில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு (வ)  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9கடகம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  சிம்மம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில்  குரு (வ)  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5  கன்னி: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு (வ)  - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய்-   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன்  அனுசரித்துச் செல்வது நல்லது.  வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6  துலாம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு (வ)  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு (வ)  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும் அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9      தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - சுகஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர  ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - விரைய ஸ்தானத்தில்  குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வீண் மனக் கவலை உண்டாகும். இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6  மகரம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - லாப ஸ்தானத்தில்  குரு (வ)  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிள்ளைகள் சொல்வதை  கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6  கும்பம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில்  குரு (வ)  - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5  மீனம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுகஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில்  குரு (வ)  - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3  

newstm.in

Trending News

Latest News

You May Like