1. Home
  2. ஜோதிடம்

22-10-2018 தினப்பலன் -இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது நல்லது

22-10-2018 தினப்பலன் -இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது நல்லது

22-10-2018-newstm-daily-free-astrology

22-10-2018 தினப்பலன் -இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது நல்லது

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் Iசரத்ருது I ஐப்பசி 05 I இங்கிலீஷ்: 22 October 2018 Iதிங்கள்கிழமை

த்ரயோதசி இரவு 10.20 மணி வரை. பின் சதுர்த்தசி I பூரட்டாதி காலை 8.13 மணி வரை. பின் உத்திரட்டாதி

துருவம் நாமயோகம் Iகௌலவம் கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: 30.41I அகசு: 29.19 Iநேத்ரம்: 2 Iஜீவன்: 1 I துலாம் லக்ன இருப்பு: 7.50 I சூர்ய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 7.30 - 9.00 I எமகண்டம்: காலை 10.30 - 12.00 I குளிகை: மதியம் 1.30 - 3.00 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு:இன்று கீழ்நோக்கு நாள் I பிரதோஷம் I சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்

திதி: திரயோதசி I சந்திராஷ்டமம்: பூரம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம் கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு  - பாக்கிய ஸ்தானத்தில் சனி  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.  குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து  முடிப்பீர்கள். உங்களது நற்செயல்கள் மூலம் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரத்து குறைவின்றி இருக்கும். தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - களத்திர ஸ்தானத்தில் குரு  - அஷ்டம ஸ்தானத்தில் சனி  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் லாபமில்லாத ஆதாய மில்லாத வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓயாத உழைப்பும் குறைவான பலனும் ஏற்படும். வாழ்க்கை துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன் மருத்துவ செலவும் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்படலாம் அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளால் பெருமை சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9மிதுனம் கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில்  சனி  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நல்ல காரியங்கள் செய்வதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கிடைக்கும். அடுத்தவர் செய்யும் தவறுகளை மன்னித்து அதனால் நற்பெயர் பெறுவீர்கள். திடீர் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மறையும். எதைப்பற்றியாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7 தினம் ஒரு மந்திரம் - உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகம் இது தான்கடகம் கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி  - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும்.  போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9சிம்மம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - சுகஸ்தானத்தில் குரு  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.  உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கன்னி கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு  - சுக ஸ்தானத்தில் சனி  - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சொத்து விவகாரங்களில் காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். எதிலும் கூடுதல் கவனம் தேவை. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். முக்கியநபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்க பெறலாம். பணவரத்து அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் எதிலும் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்துலாம் கிரகநிலை: ராசியில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி வேகம் பிடிக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மனவருத்தம் உண்டாகலாம்.  திருமண முயற்சி மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.  வீண் ஆசைகள் தோன்றலாம் கட்டுப்படுத்துவது நல்லது. திட்டமிட்டு செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9விருச்சிகம் கிரகநிலை: ராசியில் குரு  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி  -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.  துணிச்சலாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகம் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6தனுசு கிரகநிலை: ராசியில் சனி  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுகஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - அயன சயன போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மைதரும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.  வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7 எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - லாப ஸ்தானத்தில் குரு  - அயன சயன போக ஸ்தானத்தில் சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7கும்பம் கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - தொழில் ஸ்தானத்தில் குரு  - லாப ஸ்தானத்தில் சனி  - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வெளிநாடு தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். திறமை வெளிப்படும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3மீனம் கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - பாக்கிய ஸ்தானத்தில் குரு  - தொழில்  ஸ்தானத்தில் சனி  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும் பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலை களை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்த மடையும் சம்பவங்கள் ஏற்படலாம்.  பிள்ளைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நெருக்கமானவர்களுடன் ஏற்படும் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும். எதைப்பற்றியாவது யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்.  பண தேவை உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

newstm.in

Trending News

Latest News

You May Like