1. Home
  2. ஜோதிடம்

21-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

21-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

21-11-2018-newstm-daily-free-astrology

21-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

கணித்தவர் : கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது I கார்த்திகை 05 I இங்கிலீஷ்: 21 November 2018 I புதன்கிழமை

த்ரயோதசி பகல் 1.34 மணி வரை. பின் சதுர்த்தசி I அசுபதி மாலை 6.42 மணி வரை. பின் பரணி

வ்யதீ பாதம் நாமயோகம் I தைதுலம் கரணம் I மரண யோகம்

தியாஜ்ஜியம்: 20.55 I அகசு: 28.42 I நேத்ரம்: 2 Iஜீவன்: I விருச்சிக லக்ன இருப்பு: 8.04I சூர்ய உதயம்: 6.14

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று சமநோக்கு நாள் I பிரயாணத்திற்கு யோகினி வலப்புறமிருக்க நன்மையுண்டாகும்.

திதி: சதுர்த்தசி I சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9ரிஷபம்: இன்று கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 மிதுனம்: இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7  கார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்கடகம்: இன்று முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை                                         அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9சிம்மம்: இன்று மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9கன்னி: இன்று உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம்.  வெளுத்தது எல்லாம் பால் என்று நினைப்பீர்கள். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7 ஐயப்ப பக்தர்கள் சொல்ல வேண்டிய ஐயப்ப காயத்ரி மந்திரம்துலாம்: இன்று காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7விருச்சிகம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 தனுசு: இன்று பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். . நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9  24 தலைமுறைக்கு புண்ணியம் தரும் திருவண்ணாமலை தீபம்மகரம்: இன்று கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3கும்பம்: இன்று சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம்  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்                                                 அதிர்ஷ்ட எண்: 5, 6மீனம்: இன்று உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்   அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

newstm.in

Trending News

Latest News

You May Like