1. Home
  2. ஜோதிடம்

21-10-2018 தினப்பலன் -இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும்

21-10-2018 தினப்பலன் -இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும்

21-10-2018-newstm-daily-free-astrology

21-10-2018 தினப்பலன் -இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம்I சரத்ருதுI ஐப்பசி 04I இங்கிலீஷ்: 21 October 2018I ஞாயிற்றுக்கிழமை

துவாதசி இரவு 9.16 மணி வரை. பின் த்ரயோதசிI சதயம் காலை 6.21 மணி வரை. பின் பூரட்டாதி

வ்ருத்தி நாமயோகம்I பவம் கரணம்I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 17.51I அகசு: 29.20I நேத்ரம்: 2I ஜீவன்: 1I துலாம் லக்ன இருப்பு: 7.54I சூர்ய உதயம்: 6.06

ராகு காலம்: மாலை 4.30 - 6.00 I எமகண்டம்: மதியம் 12.00 - 1.30 I குளிகை: மதியம் 3.00 - 4.30 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:இன்று மேல் நோக்கு நாள் I திருப்பதி ஸ்ரீமுருகப் பெருமான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல் I சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் நன்று

திதி: துவாதசி I சந்திராஷ்டமம்: மகம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு  - பாக்கிய ஸ்தானத்தில் சனி  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - களத்திர ஸ்தானத்தில் குரு  - அஷ்டம ஸ்தானத்தில் சனி  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9மிதுனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில்  சனி  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு - சுக ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி  - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தீர்க்கமான சிந்தனையும் தெளிவான முடிவெடுக்கும் திறமையும் வெளிப்படும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9சிம்மம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - சுகஸ்தானத்தில் குரு  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5கன்னி: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு  - சுக ஸ்தானத்தில் சனி  - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்துலாம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி  -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுகஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள்.  நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.  வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9தனுசு: கிரகநிலை: ராசியில் சனி  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - அயன சயன போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 தோஷங்கள் போக்கும் தேய்பிறை அஷ்டமி பூஜைமகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - லாப ஸ்தானத்தில் குரு  - அயன சயன போக ஸ்தானத்தில் சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கும்பம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - தொழில் ஸ்தானத்தில் குரு  - லாப ஸ்தானத்தில் சனி  - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7மீனம்: கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ), புதன், சூர்யன்   - பாக்கிய ஸ்தானத்தில் குரு  - தொழில்  ஸ்தானத்தில் சனி  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று காரியங்களும் நல்ல படியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like