1. Home
  2. ஜோதிடம்

20-8-2018 தினப்பலன் - வாரத்தின் முதல்நாள் எப்படி இருக்கும்?

20-8-2018 தினப்பலன் - வாரத்தின் முதல்நாள் எப்படி இருக்கும்?

20-8-2018-newstm-daily-free-astrology

20-8-2018 தினப்பலன் - வாரத்தின் முதல்நாள் எப்படி இருக்கும்?

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I ஆவணி 04 I இங்கிலீஷ்: 20 August 2018 I திங்கள்கிழமை

நவமி காலை 7.29 மணி வரை. பின் தசமி I கேட்டை இரவு 1.51 மணி வரை. பின் மூலம்

வைத்ருதி நாமயோகம் I கௌலவம் கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: - I அகசு: 30.48 I நேத்ரம்: 2 I ஜீவன்: 1/2 I சிம்ம லக்ன இருப்பு: 8.01 I சூர்ய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 7.30 - 9.00 I எமகண்டம்: காலை 10.30 - 12.00 I குளிகை: மதியம் 1.30 - 3.00 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று சமநோக்கு நாள் I மதுரை ஸ்ரீசொக் கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை. I விருஷபாரூட தரிசனம்

திதி: தசமி I சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களைப் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்!

மேஷம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் திறமை வெளிப்படும். பொருளாதாரம் சம்பந்தாமாக தீவிர கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ஆவணி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யுங்கள்...ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 இந்த வார ராசி பலன்! ஆகஸ்ட் 19 முதல் 25 வரை... படிக்க கிளிக் செய்யுங்கள்மிதுனம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9கடகம் கிரகநிலை: ராசியில் புதன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 இதைப் படிச்சீங்களா? கோலமாவு கோகிலா திரை விமர்சனம்சிம்மம் கிரகநிலை: ராசியில் சூர்யன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9கன்னி கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். குடும்ப கஷ்டம், கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,2துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6விருச்சிகம் கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 இதைப் படிச்சீங்களா?  உங்கள் நட்சத்திரத்தை கிளிக் செய்யுங்கள்... நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்! பகுதி - 2தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9   மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று மனக்கவலை உண்டாகும். மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது நல்லது. காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். சக ஊழியர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3கும்பம் கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று மனோ தைரியம் உண்டாகும். மனதில் இருந்த கவலை, வருத்தம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6மீனம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தொழில் வியாபாரம் சீராகும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த பிரச்னைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

newstm.in

Trending News

Latest News

You May Like