1. Home
  2. ஜோதிடம்

20-7-2018 தினப்பலன் - இந்த ஆறு ராசிகாரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது!

20-7-2018 தினப்பலன் - இந்த ஆறு ராசிகாரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது!

newstm-daily-free-astrology-20-6-2018

20-7-2018 தினப்பலன் - இந்த ஆறு ராசிகாரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

NewsTM தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 04 I இங்கிலீஷ்: 20 July 2018 I வெள்ளிக்கிழமை

அஷ்டமி மாலை 6.52 மணி வரை. பி ன் நவமி I சித்திரை பகல் 1.56 மணி வரை. பின் சுவாதி I ஸித்தம் நாமயோகம்

பத்ரை கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 33.59 I அகசு: 31.22 I நேத்ரம்: 1 I ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 8.02 I சூர்ய உதயம்: 6.02

ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று சம நோக்கு நாள் I திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கிருஷ்ணாவதாரம்.

இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டரா மஸ்வாமி குதிரை வாகனத்தில் பவனி.

திதி: அஷ்டமி I சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

உங்கள் ராசிக்கான ஆடி மாத ராசி பலன் மற்றும் பரிகாரங்கள்!

மேஷம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: சிந்தனையில் புதுமையுடனும், செயலில் நேர்மையுடனும் வாழ்ந்து வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே, இன்று தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களால் சில பிரச்னைகளை சந்தித்து சுமுக தீர்வைக் காண்பீர்கள். லாபத்திற்குக் குறைவில்லை. வியாபாரிகளுக்கு பழைய நிலுவைகள் அனைத்தும் வந்துசேரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: நல்ல எண்ணங்களை மனதில் வளர்த்து பார் புகழ பணி செய்திடும் ரிஷபராசி அன்பர்களே, இன்று வியாபாரத்திலும் நல்ல மேன்மையையும் லாபத்தையும் அடைவீர்கள். தங்க வேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவீர்கள். வேலை தேடும் இளைஞர்கள் தக்க வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மிதுனம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: முன் யோசனையுடன் செயல்பட்டு துன்பங்களை விலக்கி வைத்து வெற்றிகள் பெறும் மிதுன ராசி அன்பர்களே, இன்று கடிதத் தொடர்பில் அனுகூலச் செய்திகளைப் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்கள் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பெற்றோர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். வரவேண்டிய நிலுவைகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன் : கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு பிறர் மனம் கவர்ந்திடும் கடக ராசி அன்பர்களே, இன்று மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருப்பார்கள். அனைத்து நிலைகளிலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரம் எப்போதும் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வலிய வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: தன்னலத்தில் கொஞ்சமும், பிறர்நலத்தில் அதிக கவனமும் செலுத்தி புண்ணியங்கள் பெறும் சிம்ம ராசி அன்பர்களே, இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி உயர்கல்விக்குரிய மதிப்பெண்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6கன்னி கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன் : கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இடைவிடாத உழைப்பினால் பொருளை தக்க வைத்திடும் கன்னி ராசி அன்பர்களே, இன்று சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். வழக்குகள் வெற்றியைத் தரும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6துலாம் கிரகநிலை: ராசியில் குரு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: நன்மை தீமைகளை ஆய்ந்தறிந்து நியாய வழியில் அடுத்தவருக்கும் உதவி புரிந்திடும் துலாம் ராசி அன்பர்களே, உங்கள் வெற்றி ஒவ்வொன்றுக்கும் உங்கள் நற்செயல்கள் உறுதுணையாக இருக்கும். இன்று வியாபாரிகள், சக வியாபாரிகளால் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து அதிக லாபம் பெறுவார்கள். திட்டமிட்டபடி நல்லதே எல்லா விஷயங்களிலும் நடக்கும். பெற்றோர் ஆதரவு பெருகும். தூர தேச செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: பிறர் போற்றலையும், தூற்றலையும் பொருட்படுத்தாது தனக்கென்று தனிப் பாதை வகுத்து செயல்படும் விருச்சிகராசி அன்பர்களே, இன்று இது வரை சந்தித்துவந்த தடை, தாமதங்கள் விலகிச் செல்லும். பணநிலை யில் திருப்தியான வரவுகள் உண்டு. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு, சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: கற்பனை வாழ்க்கையில் கவனம் செலுத்தாது, நிஜ வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து வாழும் தனுசு ராசி அன்பர்களே, இன்று தொழிலதிபர்கள் நினைத்தபடி, தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உற்பத்தியைப் பெருக்குவார்கள். காவல்துறையில் பணிபுரியும் ஒருசிலர் திடீர் மாறுதல்களைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த மாறுதல் தள்ளிப்போகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: பொருள் தேடும் வழியில் அருளையும் நாடிச் செயல்படும் எண்ணம் நிறைந்த மகர ராசி அன்பர்களே, இன்று வியாபாரிகள் செய்த கொள்முதல் அனைத்தும் விற்பனையாகும். கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திருமணப் பேச்சுகள் கைகூடும். உங்களை நேசித்த ஒருவரை திடீரென்று பிரிய வேண்டிவரலாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6கும்பம் கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: தகுதிக்கேற்ப வாழ்ககை நடத்தி கிடைத்ததை பெரிதென எண்ணி வாழ்ந்திடும் கும்ப ராசி அன்பர்களே, இன்று பெற்றோர் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். மாணவர்கள் படிப்பிற்காக கேட்ட இடஒதுக்கீடுகளைப் பெறுவார்கள். கடிதத் தொடர்புகள் அனுகூலமாக அமையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6மீனம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: தனது செயல்களை பிறர் அறியாத வண்ணம் சூட்சுமமாய் செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே, அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களால் நல்ல விற்பனையை அடைவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ராஜயோகம் தரும் சனிப்பெயர்ச்சி: பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

newstm.in

Trending News

Latest News

You May Like