1. Home
  2. ஜோதிடம்

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் - தக்ஷிணாயம் - ஹேமந்த ரிது - மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி - வெள்ளிக்கிழமை பின்னிரவு சனிக்கிழமை முன்னிரவு - கேட்டை நக்ஷத்ரம் - சித்தயோகம் - கன்னியா லக்னம் - வ்ருச்சிக சந்திரா லக்னம் - ரிஷப நவாம்சம் - கும்ப சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2022ம் ஆண்டு பிறக்கிறது.

ராசிநிலை - பாதசார விபரம்:

லக்னம் - ஹஸ்தம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்

சூரியன் - பூராடம் 1ம் பாதம் - சுக்கிரன் சாரம்

சந்திரன் - கேட்டை 2ம் பாதம் - புதன் சாரம்

செவ்வாய் - கேட்டை 2ம் பாதம் - புதன் சாரம்

புதன் - உத்திராடம் 2ம் பாதம் - சூர்யன் சாரம்

குரு - சதயம் 1ம் பாதம் - ராகு சாரம்

சுக்கிரன்() - உத்திராடம் 3ம் பாதம் - புதன் சாரம்

சனி - திருவோணம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்

ராகு - க்ருத்திகை 3ம் பாதம் - சூர்யன் சாரம்

கேது - அனுஷம் 1ம் பாதம் - சனி சாரம்

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண்: 2022:

இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 2 = 6. ஆறு என்பது சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண். மஹாவிஷ்ணுவிற்கும் மஹாலக்ஷ்மிக்கும் உகந்த எண் ஆறாகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் ஐந்தாமிடத்தில் சூர்யன் சாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதன் - குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் - பஞ்சம ரண ருணாதிபதி சனி ஆகியோர் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். குருவின் சஞ்சாரத்தால் கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்யமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை - எழுத்துதுறை - ஆசிரியர் துறை - கணிதம் - ரசாயணம் - ஆண்மீகம் - சோதிடம் - வழக்கறிஞர் துறை - புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் தனது சஞ்சாரத்தை யோக ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். புத்தாண்டு பிறக்கும் போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

(அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக் (), சனி - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-04-2022 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

தனது எதிர்கால சிந்தனையாலும் - தெளிவான பேச்சினாலும் வாழ்க்கையில் வெற்றி பெறும் மேஷ ராசி அனபர்களே,

இந்த வருடத்தில் மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.

குடும்பம்:

குடும்பத்தில் நீண்ட நாட்களாக சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களின் தன்மையை உணர்ந்து பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். நட்பில் புதியவர்களின் தொடர்பு ஏற்படும்.

பொருளாதாரம்:

வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். இந்த ஆண்டு சனி பகவான் உங்களின் பாக்கிய ஸ்தானத்தில் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள்.

ஆரோக்கியம்:

உடல் ஆரோக்யம் சிறப்படையும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகளிலிருந்து தப்புவீர்கள். மனம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் விலகும். மாற்று மருத்துவத்தின் மூலம் அனுக்கூலம் பெறுவீர்கள்.

பெண்கள்:

பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் ஆண்டாக இது அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.

உத்தியோகஸ்தர்கள்:

அரசுத் துறைகளில் பணி செய்வோருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வியாபாரிகள்:

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் உங்களுக்குப் புதிய பதவிகளை அளிக்கும்.

கலைத்துறையினர்:

பொறுப்புகள் கூடும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

மாணவமணிகள்:

மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

அசுபதி:

இந்த ஆண்டு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.

பரணி:

இந்த ஆண்டு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும்.

கார்த்திகை 1:

இந்த ஆண்டு பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.

பரிகாரம் : அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “சுப்பிரமணிய புஜங்கம்பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: “செவ்வரளி மலரைஅம்மனுக்கு படைத்துவர துன்பங்கள் யாவும் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

கிரகநிலை:

ராசியில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக் (), சனி - தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-04-2022 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப இராசி அன்பர்களே

இந்த ஆண்டில் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். அதேநேரம் வேறு பல சாதகமான நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள்.

குடும்பம்:

குடும்பத்தில் மற்றவர்களால் தேவையில்லாத வீண் கலகம் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரை அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மையைத் தரும். வாழ்க்கைத்துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடு உண்டாகலாம். குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் பொறுமையை கடைபிடிப்பது அனுகூலம் தரும். உடல் பொலிவடையும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள்.

பொருளாதாரம்:

அவ்வப்போது பண பிரச்சனைகள் வந்தாலும் குரு பகவானின் சஞ்சாரத்தால் அனைத்து பிரச்சனைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். உங்கள் ராசிநாதனே சுக்கிரனாக அமைவதால் எந்த பிரச்சனையும் தலைக்கு வந்தது தலைப்பகையுடன் சென்றது போல் கடந்து செல்வீர்கள். கடன் சார்ந்த விஷயங்கள், முதலீடு சார்ந்த விஷயங்களை அனைத்திலும் அதிக கவனம் தேவை. வருமானம் சீராக இருக்கும்.

ஆரோக்கியம்:

சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய வருடம் இது.

பெண்மணிகள்:

பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும்.

வியாபாரிகள்:

வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர்:

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

மாணவமணிகள்:

மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.

கார்த்திகை 2 - 3 - 4:

இந்த ஆண்டு பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.

ரோகினி:

இந்த ஆண்டு மூலம் வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

மிருகசீரிஷம் - 1, 2:

இந்த ஆண்டு வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.

பரிகாரம் : அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: "கோளறு திருப்பதிகத்தை' அன்றாடம் பாராயணம் செய்வது.

மலர் பரிகாரம்: “தாமரை மலரைபெருமாளுக்கு சாத்திவர பொருளாதார நிலைமை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

கிரகநிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக் (), சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-04-2022 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன இராசி அன்பர்களே

இந்த ஆண்டு, உங்களின் ராசியைப் பார்க்கும் சுபகாரகன் குரு பகவானால் அனைத்து விஷயங்களிலும் இருந்த தொய்வு நிலை மாறும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். தனித்து நின்று போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். உங்களின் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும்.

குடும்பம்:

குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வெளி மனிதர்களால் அவ்வப்போது சிற்சில பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் அனைத்து பிரச்சனைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்தினர் அனைத்து விஷங்களிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.

பொருளாதாரம்:

பங்குச் சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். ஏற்றுமதி சார்ந்த விஷயங்களில் அனைத்து லாபங்களையும் பெறுவீர்கள். பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சொத்துக்கள் புதிதாக வாங்குவதற்கும் பழையனவற்றை புதுப்பிப்பதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். அதே வேளையில் கடுமையான பணிச் சுமையால் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.

பெண்மணிகள்:

பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உத்யோகஸ்தர்கள்

உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.

வியாபாரிகள்:

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.

அரசியல்துறையினர்:

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.

கலைத்துறையினர்:

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

மாணவமணிகள்:

மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.

மிருகசீரிஷம் - 3, 4:

இந்த ஆண்டு லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.

திருவாதிரை:

இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

புனர்பூசம் - 1, 2, 3:

இந்த ஆண்டு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

பரிகாரம்: சங்கட சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடவும். முடிந்தபோதெல்லாம் ஔவையார் அருளிய "விநாயகர் அகவல்' துதியை பாராயணம் செய்யவும். இதனால் பல சங்கடங்கள் தவிடுபொடியாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ’ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்அன்றாடம் பாராயணம் செய்வது.

மலர் பரிகாரம்: “மரிக்கொழுந்து மலரைஏதேனும் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் லக்ஷிமிக்கு சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக் (), சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-04-2022 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கடக ராசி அன்பர்களே

இந்த ஆண்டு அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம்:

உங்கள் பேச்சில் வசீகரமும் இனிமையும் வேதாந்த ரகசியங்களும் கலந்து இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்கள் உங்களை வந்து சேரும். வெகுகாலம் தீராத பிரச்சனைகள் தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். உறவினர்கள் உங்களிடம் உதவிகளைப் பெற வருவார்கள். நடைமுறை செயல்பாடுகளை அறிந்து அதற்கேற்ப உதவலாம். திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு உறவினர் சார்நத வகையில் சில தடைகள் வந்து விலகும். வெளிநாடு சென்று திரும்பும் யோகம் அதிகம் உண்டு. உடல்நலமும் உள்ளநலமும் ஆரோக்கியமாக இருக்கும். பிள்ளைகள் சார்ந்த வகையில் வீண் செலவுகளை செய்யும் நிலை உருவாகி பின்னர் நீங்கிவிடும். குடும்ப ஒற்றுமையில் குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

பொருளாதாரம்:

மிக சீராக இருக்கும். கடன் பிரச்சனை அனைத்தும் தீரும். பணப் பிரச்சனை தீர்வதற்கான வழிகள் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் மூலமாக தேக்க நிலை மாறும்.

ஆரோக்கியம்:

உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

பெண்கள்:

பெண்கள் கைதொழில் ஒன்றை கற்றுக்கொண்டு தொழில் மேன்மை பெறுவார்கள். குறிப்பாக ஆடை வடிவமைப்பு, உணவு பண்டங்களை தயாரிப்பு, அழகு சாதன பொருட்கள் விற்பவர்கள் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். குறித்த நேரத்தில் தடைகள் விலகி விடும். திருமணம் ஆன பெண்கள் கணவருடன் இருந்து வந்த மன பேதங்கள் விலகும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகஸ்தர்கள் தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு தேவையான பொருளாதாரம் நிறைந்த வகையில் கிடைக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களால் வேதவாக்காக கருதப்படும். உங்களது நற்செயல்களால் புகழ் உண்டாகும். ஊழியர்களால் அதிகம் நேசிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும். வீடு மனை வாகன வகைகளில் நல்ல லாப பலன்கள் நடந்து மனதை மகிழ்விக்கும். பிள்ளைகள் அதிகப்படியாக பணம் செலவழிக்கும் வாய்ப்புகளும் அதனால் தந்தை மகன் உறவு முறையில் சிறிது மனக்குறைவுகளும் உண்டாகி விலகும். எதிரிகளால் இருந்த இன்னல்கள் மாறி மனம் நிம்மதி பெறும். உடல் ஆரோக்கியமும் உயர்ந்திருக்கும். தந்தை வழியில் உள்ள சொத்துக்கள் ஆதாய பலன்களைத் தரும். பார்க்கும் உத்தியோகத்தில் முழு தன்னிறைவும் பாராட்டுகளும் கிடைக்கும்

வியாபாரிகள்:

உணவுப் பொருட்கள், பர்னிச்சர் மற்றும் ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்வோர் அதிக லாபங்கள் பெறுவார்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். விருதுகள் பாராட்டுகள் பெறுவார்கள். ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு வெளிநாட்டிலிருந்து நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில் செய்வோர் அபிவிருத்தி அடைவார்கள். எதிரிகளால் இருந்த மனக்கவலைகள் நீங்கி விடும்.

அரசிய்லவாதிகள்:

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைச் சாதனைகளாக மாற்றிக்காட்டுவீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் புதிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் ஏற்படும் இடையூறுகள் தானாகவே விலகி விடும். உங்கள் கருத்துக்களை அடுத்தவர்களிடம் திணிக்க முயல வேண்டாம். எதிரிகளின் சூழ்ச்சியால் இருந்த அவப்பெயர் நீங்கும். அரசாங்கம் மூலமாக தொழில் செய்பவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகுந்த அனுசரணையுடன் அடைந்து ஏற்றம் பெறுவார்கள். அரசியலில் புதிய பிரவேசம் நிகழ்த்த இருப்பவர்கள் சனிபகவானின் நல்லருளைப் பலமாகப் பெற்று மக்களிடம் நற்பெயர் பெறுவார்கள்

கலைத்துறையினர்:

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். நல்ல வருமானம் கிடைக்கும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள். போதும் என்கிற மனநிறைவைப் பெறுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். உடன் பணிபுரிபவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தாலும் அவர்களால் பெரிய நன்மைகள் உண்டாகாது. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். சினிமா சார்ந்த டெக்னீசியன்கள் நிறைய வேலை வாய்ப்பு பெறுவார்கள். மரத்தில் சிறபங்களை வடிவமைக்கும் கலைஞர்கள் புதிய முயற்சிகளினால் வரவேற்பு பெறுவர்.

மாணவர்கள்:

மாணவர்கள் கட்டடக்கலை, விவசாயம், மெக்கானிக்கல் துறை சார்ந்த மாணவர்கள் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற உயற்பயிற்சிகளையும், மன வலிமை பெற யோகா போன்றவைகளையும் மேற்கொள்வீர்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும். மேற்படிப்பிற்கு தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் கெயல்பாடுகள் இருக்கும்.

புனர்பூசம் 4:

இந்த ஆண்டு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

பூசம்:

இந்த ஆண்டு ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.

ஆயில்யம்:

இந்த ஆண்டு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

மலர் பரிகாரம்: சனிக்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஷட் ஷண்முகாய நம:”.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக் (), சனி - களத்திர ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-04-2022 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

தனது தோரணையாலும் அதிகாரத்தினாலும் வேலைகளை சாதிக்கும் திறமை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே

இந்த ஆண்டு மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

குடும்பம்:

கணவன் மனைவி இடையெ ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதரம் வழிசார்ந்த உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உருவாக குரு தனது பார்வையை செலத்துகிறார். இதனால் மனம் மகிழ்ச்சி கொள்ளும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் எண்ணத்திற்கேற்ப நடந்து கொண்டு நற்பெயரை காப்பாற்றுவர்கள். வீடு மனைகள் வாங்கவும் அதனை அழகுபடுத்தவும் நல் வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் மூலம் நற் பலன்கள் தர உள்ளதால் அவரது பெயரில் புதிய சொத்து வாங்கும் யோகும் உள்ளது. குடும்ப ஒற்றுமை மேன்யைடையும். தந்தை வழி உறவினர்கள் தகுந்த உதவிகள் தருவார்கள். குல தெய்வ அருள் தகுந்த சமயத்தில் நல் வழிகாட்டும். புகைப்பிடிப்பது, மது போன்ற பழக்கங்களை விட்டு விடுவது நல்லது.

ஆரோக்கியம்:

உடல் நலத்தில் பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதால், அதற்கு தகுந்த பயிற்சிமுறைகளும் மருத்தவ சிகிக்சை முறைகளும் பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு பெறலாம். விஷப் பிராணிகளிடம் விலகி இருத்தல் நலம். உடல் நலத்தில் தகுந்த கவனம் வேண்டும்.

பொருளாதாரம்:

குடும்ப அங்கத்தினர்கள் உங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு தருவார்கள். ஒய்வுக்குகூட நேரமின்றி உழைப்பே பிரதானமாக செயல்படுவீர்கள். பணப் பிரச்சனை தீரும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் குறையும். உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவீர்கள். மேலிட்த்தின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களுக்கான அங்கீகாரம் உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உண்டு. புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். அயல்நாடு சம்பந்தமான செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை கற்பீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை உண்டாகும்.

வியாபாரிகள்:

வியாபாரிகள் தொழிலதிபர்களுக்கு தகுந்த லாபங்கள் கிடைக்கும். தங்கும் விடுதிகள், சுற்றுலா பஸ்கள், சுற்றுலா கைடுகள் ஆகிய தொழில் செய்பவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பார்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய தேவையான நிதி உதவிகளை வங்கிகளில் தாராளமாக பெறுவார்கள். விருதுகளும். பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவார்கள். உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் பெற்று தொழில் வளர்ச்சி காண்பார்கள். நவரத்தின கற்கள், தங்கம் வெள்ளி விற்பவர்களுக்கு பொன்னான காலமிது. மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளை நடத்துபவர்கள் வசதிகளை ஏற்படுத்தி கூடுதல் வருமானம் பெறுவார்கள். விவசாயப் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் சனியின் அருளால் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்களை அடைப்பீர்கள். உங்கள் நிறுவனத்திற்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள்:

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பொருளாதார தடங்கல்கள் விலகும். செழிப்பான பணப்புழக்கம் ஏற்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவர்கள் தங்கள் பணிகளில் திறமையான நிர்வாகம் செய்து உயரதிகாரிகளிடம் நற்பெயரும், பதவி உயர்வும் பெறுவார்கள். இனிமையாக பேசுதலும் சமூகத்தில் புகழ்பெறும் வாயப்புகளும் நிறைய உண்டு. வீட்டை அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அரசியல்வாதிகள்:

சேவை செய்வதில் இருந்து வந்த மந்த நிலை மாறும். ஆன்மீக எண்ணங்களும் நாத்திக செயல்பாடுகளும் சம நிலையாக இருக்கும். கோயில்களுக்கான திருப்பணிகளில் நிறைவான பொருளாதார பங்களிப்பை உறவினர் மற்றும் நண்பர்களிடம் நன்கொடை பெற்று தன் பங்கையும் இணைத்து திருப்பணிக்கு வழங்குவார்கள்.

கலைஞர்கள்:

கலைஞர்கள் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவார்கள். பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். தொழிலில் புதிய சாதனைகளை நிகழ்த்தி நற்பெயரும், பரிசும், பதக்கமும் பெறுவார்கள்.

மாணவர்கள்:

முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான செலவுகளுக்கு பொருளாதாரம் கிடைக்கும். நற்பெயர் பெறுவீர்கள். கல்விக்கு உதவும் வகையிலான சுற்றுலாக்களில் பங்கு பெறுவீர்கள். பேச்சில் இனிமையை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியம் பெற முடியும்.

மகம்:

இந்த ஆண்டு குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மன நிம்மதி உண்டாகும்.

பூரம்:

இந்த ஆண்டு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். வியாபார போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.

உத்திரம் - 1:

இந்த ஆண்டு உங்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் சிவனுக்கு வில்வ மாலை சாற்றி தீபம் ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் நமசிவாய”.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக் (), சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-04-2022 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

பெருந்தன்மையான குணத்தால் விட்டு கொடுத்து வாழ்ந்து வெற்றியை பெற்று வரும் கன்னி ராசி அன்பர்களே

இந்த ஆண்டு அயராது பாடுபடும் உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். சோம்பேறித் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். தாய் வழி உறவுகளில் சுமுகமான நிலைமை ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பங்காளிகளும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். சமுதாய விழாக்களில் பங்கேற்பீர்கள். மற்றபடி எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பிறர் கேட்காமல் அறிவுரை வழங்க வேண்டாம். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள். நல்ல எண்ணத்துடன் செயல்களைச் செய்வீர்கள்.

குடும்பம்:

குழந்தைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். செய்தொழிலில் தொடர்ந்து வளர்ச்சியைக் காண்பீர்கள். பிறரின் சொத்துக்களை பராமரிக்கும் யோகமும் சிலருக்குக் கிடைக்கும். நெடுநாட்களாக செய்யாமல் விடுபட்ட குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களின் மனதை அரித்துக்கொண்டிருந்த விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும். உங்களின் ஞாபக சக்தியால் முக்கியமான தருணங்களில் சமயோஜிதமாகப் பேசி குடும்பத்தினரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

பொருளாதாரம்:

பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும்.

ஆரோக்கியம்:

உடல் நிலையில் நல்ல மாற்றம் இருக்கும். சோம்பேறித்தனம் அகன்று சுறுசுறுப்பாக வேலைகளைப் பார்ப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்யோகஸ்தர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஊதிய உயர்வும் நன்றாக இருக்கும். அலுவலகம் தொடர்பான உங்களின் புதிய எண்ணங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும், நல்லெண்ணங்களுக்கும் பாத்திரமாவீர்கள். அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் தனித்த திறமையும் நண்பர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து மிகுந்த வெற்றி தரும். உத்தியோகத்தில் திருப்தியும் நற்பெயரும் உண்டாகும். சிலர் மேலிடத்தின் நிர்பந்தம் காரணமாக வெளிநாடு செல்வார்கள்.

வியாபாரிகள்:

வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே அமையும். புதிய வாகனங்களை வாங்கி அதன்மூலம் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கூட்டாளிகள் உங்கள் பொறுப்புகளில் பங்கெடுத்துக்கொண்டு வேலைகளைக் குறைப்பார்கள்.

பெண்மணிகள்:

பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். வருமானத்திற்குக் குறைவு வராது என்றாலும் பொது பணிகளுக்காக உங்கள் கைப்பணத்தைச் செலவழிக்கும் முன் யோசனை செய்து கொள்ளுங்கள். மற்றபடி எதிரிகளின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து வளர்ச்சியைக் காண்பீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு உயரும். அதேசமயம் குறுகிய கண்ணோட்டத்தைத் தவிர்க்கவும்.

கலைத்துறையினர்:

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியாக வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அனாவசியச் செலவுகளைச் செய்ய நேரிடும். சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மாணவமணிகள்:

மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். எனவே அவர்களின் பழைய தவறுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். குருகுலக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் குருவை போற்றி நடந்து அவர்தரும் கல்வியில் ஞான சிந்தனையுடன் செயல்பட்டு முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர். யோகாசனப் பயிற்சியை விருப்பப்பாடமாக பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பெயர் பெறுவார்கள்

உத்திரம் - 2, 3, 4:

இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

ஹஸ்தம்:

இந்த ஆண்டு திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது உங்களுக்கு மன நிம்மதி ஏற்படுத்தித் தரும். பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக வியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.

சித்திரை - 1, 2:

இந்த ஆண்டு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்கள் சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. ஆனாலும் பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: புதன்கிழமை தோறும் ஐயப்பனுக்கு அரளிமாலை சாற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:”.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் புதன், சுக் (), சனி - பஞ்சம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

14-04-2022 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

அமுதமொழி பேசி அனைவரையும் தன் வசப்படுத்தும் துலா ராசி அன்பர்களே

இந்த ஆண்டு நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். சிறிய அளவு முயற்சிகள்கூட பெரிய பலனைத் தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக நடக்கும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் உபாதைகளுக்கு மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்வீர்கள். அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். மழலைச் செல்வம் கிடைக்கும். மனதிற்கினிய தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆனாலும் புதியவர்களுடன் கூட்டு சேர வேண்டாம். மேலும் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி சமுதாயத்தில் புகழ் பெற்ற பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் அந்தஸ்து உயரும். சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு உங்களின் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். அனாவசியச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டாம். வரவுக்குத் தகுந்த செலவுகளைச் செய்யவும். மேலும் மனதில் எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றும். எனவே சான்றோர்களின் நூல்களைப் படித்து மனதை தெளிவாக வைத்துக் கொள்ளவும்.

குடும்பம்:

குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும் கூட்டிக்கொள்வீர்கள். உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். உங்களின் பழக்க வழக்கங்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தாருடன் இனிய சுற்றுலா சென்று வருவீர்கள். நேர்வழியில் சிந்தித்து உங்களின் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பொருளாதாரம்:

சனி பகவானின் ஆதிக்கத்தால் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். குருவின் சஞ்சாரத்தால் சுப நிகழ்ச்சிகள் செய்யும் சூழ்நிலை உண்டாகும். அதற்கான செலவுகளை சமாளிக்கவும் முடியும்.

ஆரோக்கியம்:

உடல் நிலையில் இருந்து வந்த கஷ்ட சூழ்நிலை நீங்கும். ஆரோக்கியத்திற்காக இதுவரை செய்து வந்த செலவு நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகவும். சிலர் உங்களுடன் பகைமை பாராட்டுவார்கள். ஆனாலும் வருமானத்திற்குக் குறைவு இருக்காது. அலுவலக ரீதியான பயணங்களால் நல்ல அனுபத்தைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

வியாபாரிகள்:

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். திட்டமிட்டபடி செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய கடன்களைப் பெற முயற்சி செய்யவும். மற்றபடி வாடிக்கையாளர்களின் வருகை நல்லமுறையிலேயே இருக்கும். ஆனாலும் புதிய முதலீடோ அல்லது விரிவாக்கலோ இருந்தால் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும்.

பெண்மணிகள்:

பெண்மணிகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் குறைவு வராது. உங்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது. பண வரவு அதிகரிக்கும். குழந்தைகள் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் நடத்துவதில் ஏற்பட்ட தடைகள் விலகும். உற்றார், உறவினர்களுடன் ஒற்றுமை தொடரும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சிறிது மந்த நிலை காண்பார்கள்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவும், கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறி புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆனாலும் மாற்றுக் காட்சியினர் உங்கள் பேச்சில் குறை காண முயல்வார்கள். எனவே அனாவசிய விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

கலைத்துறையினர்:

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மற்றபடி உங்களின் பெயரும், புகழும் உயரும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வீர்கள். கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். கடின உழைப்பை செயல்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும்.

மாணவமணிகள்:

மாணவமணிகளின் படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோரின் உதவியுடன் நன்றாகப் படித்து வெற்றி பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்துவிட்டு ஆசிரியர் நடத்திய பாடங்களை அன்றைய தினமே படித்து மதிப்பெண்களை அள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொண்டு உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவம், இஞ்சினியரிங் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்த கவனத்துடன் செயல்பட்டு தேர்ச்சி பெறுவார்கள். இது தொடர்பான கல்வி நிறைவு செய்தவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள். நண்பர்களால் உதவி உண்டு.

சித்திரை - 3, 4:

இந்த ஆண்டு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

ஸ்வாதி:

இந்த ஆண்டு குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் - 1, 2, 3:

இந்த ஆண்டு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள். பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: மல்லிகை மலரை ஒவ்வொரு பஞ்சமியன்றும் அம்மனுக்கு வழங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸ்ரீமாத்ரே நம:”.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

2022 ஆண்டு ராசி பலன்கள் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி தரப்போகும் ஆண்டாக அமையும்..!!

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக் (), சனி - சுக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-04-2022 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

தனி வழியில் நடைபோடும் விருச்சிக ராசி அன்பர்களே

இந்த ஆண்டு உங்களின் கிரகநிலைகளை வைத்து பார்க்கும் போது நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும். உங்களைப் பகடைக்காயாக பயன்படுத்தி வந்த உற்றார், உறவினர்களின் உள்மனதைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். உங்கள் அருகிலேயே இருந்து சதி செய்தவர்கள் ஓடி ஒளிவார்கள். அரசாங்கத்தில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். காத்திருந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். நெடுநாட்களாக இழுபறியாக நடந்துவந்த வழக்குகள் சட்டென்று சாதகமாக முடியும்.

குடும்பம்:

குடும்பத்தில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆனாலும் உங்கள் சாமர்த்தியமான செயல்களால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். இல்லத்தில் களவு போன பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். இயல்பான காரியங்களைக்கூட மாற்று வழிகளில் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்களின் தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். உங்கள் சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய மந்திரங்கள் கற்பீர்கள். குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். மற்றபடி எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியச் எஸ்டேட் துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும்.

ஆரோக்கியம்:

உங்களை வாட்டிய உடல் உபாதைகளும் நீங்கிவிடும். மனப் புழுக்கத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிப்பீர்கள். மனதில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும்.

பொருளாதாரம்:

எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆனாலும் தனஸ்தானத்தில் இருக்கும் சனி பகவானால் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்யோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக ஊழியர்களிடம் உங்கள் மனதில் உள்ளவற்றைக் கூற வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்கிற நிலையில் இருப்பதே சிறப்பு. மற்றபடி அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் திறமையில் குறைவு ஏற்படாது.

வியாபாரிகள்:

வியாபாரிகளின் முயற்சிகளுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடை ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். இருப்பதை நேர்த்தியாகச் செய்து முடிப்பதே சிறப்பு. புதிய கடன்கள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

பெண்மணிகள்:

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும் கணவர் வழி உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலம் பெறவும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்திடமிருந்து தேவையான கலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் தங்கள் உறவினர்கள் மூலம் நன்மை அடைவார்கள். உறவினர்களின் பாசப்பிணைப்பு குடும்ப மேன்மைக்கு உதவிக்காரமான இருக்கும்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் அனுகூல செயலபாட்டை தேவையான நேதத்தில் தடையின்றி பெறுவார்கள். பிறருக்காக நடத்தி தரவேண்டிய பணிகள் இந்த வருடம் நடக்கும். ஆன்மீக எண்ணங்கள் மனதில் ஊற்றெடுப்பதால் தெய்வகாரியங்களை விருப்பத்துடன் செய்வீர்கள். அடுத்தவர் செலவில் நீங்கள் உங்கள் தேவைகள் எதையும் பூர்த்தி செய்யமாட்டீர்கள். மேலிடம் எல்லா வகையிலும் உங்களுக்கு துணை நிற்பார்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.

கலைத்துறையினர்:

கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். "உழைப்பே உயர்வு' என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். ஆனாலும் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவு உங்கள் மன வருத்தத்தைக் குறைக்கும் மருந்தாக அமையும். வரவேற்புகள் குறைந்தாலும் நிலைமை போகப் போக மாறிவிடும். சினிமா நாடகம் சின்னத்திரை ஆகியவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக நடிகையர்கள் தனக்குள்ள திறமையை நன்கு வளர்த்துக் கொள்வார்கள். புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரத்தையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள்.

மாணவமணிகள்:

மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு நன்றாகவே அமையும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். நடனம், இசை பயிற்சி பெறும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயின்று தேர்ச்சி பெறுவார்கள். சிவில், ஓவியம் சம்பந்தமான பயிற்சி மாணவர்கள் புதிய யுக்கதிகளை அறிந்து நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மோட்டார், வாகனம், படகுகள், விமானம் ஒட்டுவதற்கான பயிற்சி பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும்.

விசாகம் 4:

இந்த ஆண்டு வாழ்வு வளம் பெறும். துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அனுஷம்:

இந்த ஆண்டு குடும்பத்தில் சந்தோஷமான