20-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்

20-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும்
X

20-12-2019-newstm-dwstm-daily-astrology

20-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி - 04
வெள்ளிக்கிழமை

நவமி இரவு 8.07 மணி வரை. பின் தசமி
ஹஸ்தம் இரவு 10.17 மணி வரை பின் சித்திரை
அமிர்த யோகம்
நாமயோகம்: சௌபாக்யம்
கரணம்: தைதுலம்

அகஸ்: 28.26
த்யாஜ்ஜியம்: 3.06
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 4.47
சூரிய உதயம்: 6.29

ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்


குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புற்ப்பாடு.

திதி: நவமி
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

சூரியன் மூலம் 1ம் பாதம் - நட்பு
சந்திரன் கன்னி - நட்பு
செவ்வாய் விசாகம் 2ம் பாதம் - நட்பு
புதன் கேட்டை 4ம் பாதம் - நட்பு
குரு மூலம் 4ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் உத்திராடம் 3ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  ரண, ருண ஸ்தானத்தில்  சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம். தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன்  -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில்  புதன்  - அஷ்டம ஸ்தானத்தில்   சூர்யன்,   குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5  கிரகநிலை: ராசியில்  ராஹூ - சுக  ஸ்தானத்தில்  சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  புதன்  -   களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். சகோதர சகோதரிகளின் அன்பு முழுமையாக கிடைக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களின் பாசம் முழுமையாக கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  புதன் - ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  புதன்  -   பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சிலருக்குப் பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் உருவாகும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  கிரகநிலை: ராசியில் சந்திரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  புதன்  -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  கிரகநிலை: ராசியில் புதன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் -   அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு - லாப   ஸ்தானத்தில் சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று ஆன்மீக, மத நம்பிக்கைகள் அதிகரிக்கும். பேச்சுதிறமையால் வழக்குகளில் வெற்றிகள் காண்பீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம். கலைத் துறையினர் பெரும் பொருள் ஈட்டுவர். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9  கிரகநிலை: ராசியில் சூர்யன், குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  ராஹு - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய நேரம். பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6  கிரகநிலை: ராசியில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் -  லாப ஸ்தானத்தில்  புதன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில் சூர்யன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும். எந்த நேரத்திலும் பதட்டம் அடையவே கூடாது. மனைவி வகை உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன் -   பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில்  புதன் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர  ஸ்தானத்தில் சந்திரன்  -   அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன்,  குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலனில் கவனமும் கடின வேலைகளைத் தவிர்த்தலும் வேண்டும். சிலருக்கு குழந்தைகளால் அவமானம் ஏற்படலாம். பொறியியல், தத்துவம், சமையற்கலை, திரைப்படம் சம்பந்தமாகப் படிப்போருக்கு சிறப்பான பலன்கள் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  

newstm.in

Tags:
Next Story
Share it