1. Home
  2. ஜோதிடம்

20-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்

20-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்

20-11-2018-newstm-daily-free-astrology

20-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது I கார்த்திகை 04 I இங்கிலீஷ்: 20 November 2018 I செவ்வாய்க்கிழமை

துவாதசி பகல் 1.30 மணி வரை. பின் த்ரயோதசிI ரேவதி மாலை 6.09 மணி வரை I பின் அசுபதி

ஸித்தி நாமயோகம் I பாலவம் கரணம் Iசித்த யோகம்

தியாஜ்ஜியம்: -அகசு: 28.43 Iநேத்ரம்: 2Iஜீவன்: 1I விருச்சிக லக்ன இருப்பு: 8.07 I சூர்ய உதயம்: 6.14

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று சமநோக்கு நாள் Iசிலுகத் துவாதசி I பிரதோஷம் I திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு Iதேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.

திதி: திரயோதசி Iசந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9ரிஷபம்: இன்று சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும் அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்                                          அதிர்ஷ்ட எண்: 1, 5மிதுனம்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை                                       அதிர்ஷ்ட எண்: 1, 3 வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்கடகம்: இன்று உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9சிம்மம்: இன்று  உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6கன்னி: இன்று நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை ஏற்படும். எந்த வேலையையும் வேகமாகவும் விவேகமாகவும் செய்யும் திறன் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்                                       அதிர்ஷ்ட எண்: 3, 5 வீட்டில் இதை பாராயணம் செய்யுங்கள், மகாலட்சுமி வாசம் செய்வாள்துலாம்: இன்று எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்                                         அதிர்ஷ்ட எண்: 2, 9விருச்சிகம்: இன்று . எதிர்ப்புகள் குறையும்.  பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு                                                   அதிர்ஷ்ட எண்: 1, 3தனுசு: இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. சகோதர வழியில் நல்ல ஆதாயம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்  அதிர்ஷ்ட எண்: 5, 7 ஆன்மீக கதை - துன்பம் ஏன் மனிதர்களை துரத்துகிறது?மகரம்: இன்று வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம். பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை                           அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9கும்பம்: இன்று எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்                               அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மீனம்: இன்று பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும்.  வார்த்தைகள் பேசும் போது  கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். வருமானம் திருப்தி அளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

newstm.in

Trending News

Latest News

You May Like