1. Home
  2. ஜோதிடம்

18-8-2018- தினப்பலன் - சிம்மராசிக்கு இன்று குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம்!

18-8-2018- தினப்பலன் - சிம்மராசிக்கு இன்று குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம்!

18-8-2018-newstm-daily-free-astrology

18-8-2018- தினப்பலன் - சிம்மராசிக்கு இன்று குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I ஆவணி 02 I இங்கிலீஷ்: 18 August 2018 I சனிக்கிழமை

ஸப்தமி காலை 6.24 மணி வரை . பின் அஷ்டமி I விசாகம் இரவு 10.48 மணி வரை. பின் அனுஷம்

ப்ராம்மம் நாமயோகம் I வணிஜை கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 52.15 I அகசு: 30.50 I நேத்ரம்: 1 I ஜீவன்: 1/2 I சிம்ம லக்ன இருப்பு: 8.09 I சூர்ய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று கீழ்நோக்கு நாள் I திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை I இன்று கெருட தரிசனம் நன்று I கரிநாள்

திதி: அஷ்டமி I சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

உங்கள் ராசிக்கான ஆவணி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்... சந்திராஷ்டம தினங்கள்

மேஷம்  கிரகநிலை:  சுக ஸ்தானத்தில் புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்னைகளில் சாதகமான முடிவே உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 இதைப் படிச்சீங்களா? உங்கள் நட்சத்திரத்தை கிளிக் செய்யுங்கள்... நீங்கள் யார் என்று சொல்கிறோம்!ரிஷபம்  கிரகநிலை:  தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான வேலைகளையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மிதுனம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும். பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட் டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5கடகம்  கிரகநிலை:  ராசியில் புதன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்கள்: இன்று புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 இதைப் படிச்சீங்களா? பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்!சிம்மம்  கிரகநிலை:  ராசியில் சூர்யன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று குடும்பத்தில் சுமூகமான நிலை காணப் படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கன்னி  கிரகநிலை:  ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குரு பார்வையால் தேவையான பணவரத்தும் இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9துலாம்  கிரகநிலை:  ராசியில் சந்திரன், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9விருச்சிகம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9 இதைப் படிச்சீங்களா?  ருத்ராட்சத்தின் ஆன்மீக- மருத்துவ பலன்கள்தனுசு  கிரகநிலை:  ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6மகரம்  கிரகநிலை:  ராசியில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண் பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5கும்பம்  கிரகநிலை:  ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மேலிடத்திலிருந்து பாராட்டு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2, 9 இதைப் படிச்சீங்களா?  எங்கும் கலப்படம்... எதிலும் கலப்படம்!!மீனம்  கிரகநிலை:  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று மனக் குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

newstm.in

Trending News

Latest News

You May Like