18-7-2018 தினப்பலன் - இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாள்!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்.

18-7-2018 தினப்பலன் - இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாள்!
X

daily-free-astrology-18-7-2018

18-7-2018 தினப்பலன் - இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாள்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 02 I இங்கிலீஷ்: 18 July 2018 I புதன்கிழமை

ஷஷ்டி இரவு 8.41 மணி வரை. பின் ஸப்தமி I உத்திரம் பகல் 2.28 மணி வரை. பின் ஹஸ்தம்

பரிகம் நாமயோகம் I கௌலவம் கரணம் I அமிர்த யோகம் I தியாஜ்ஜியம்: 41.40 I அகசு: 31.24

நேத்ரம்: 1 I ஜீவன்: 1/2 I கடக லக் ன இருப்பு: 8.10 I சூர்ய உதயம்: 6.02

ராகு காலம் : மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00

சூலம்: வடக்கு I பரிகாரம்: பால் I குறிப்பு: இன்று மேல் நோக்கு நாள்

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு. ஷஷ்டி விரதம்.

திதி: சூன்ய திதி I சந்திராஷ்டமம்: அவி ட்டம், சதயம்

ஆடி மாத ராசி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்...

மேஷம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று வியாபாரிகள் எதிர்பார்த்தபடி விற்பனை, லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிட்டும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள். அரசியல் வாதிகளின் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று உங்களுக்கு இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மாறும். மனதில் உற்சாகம் பெருகும். உதவி செய்யாத சகோதரர்கள் முன்வந்து உதவுவார்கள். அதனால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகள், வேலைவாய்ப்பு, திருமணம் இனிதே நிறைவேறும். இதுவரை வாட்டி வதைத்த பிணி, பீடை நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5மிதுனம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில், சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை நிறுவும் திட்டம் நிறைவேறும். உங்களை எதிர்த்துத் தொழில் செய்தவர்கள் உங்களைக் கண்டு மிரண்டு ஓடுவார்கள். வெளிநாட்டில் தொழில் துவங்க இருந்த தடைகள் விலகும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில், சந்திரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று முதியோர்களால் வைத்தியச் செலவுகள் வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி எண்ணம் ஈடேறும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், மாறுதலும் கிட்டும்காவல்துறை, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரிகள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று சிறுவியாபாரிகளும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பெண்கள் விரும்பிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். அடகுபோன நகைகளையும் மீட்பார்கள். விவசாயிகள், ரியல் எஸ்டேட் செய்வோர் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் திறமையோடு இருப்பார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5கன்னி கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று முழுவதும் உங்கள் உழைப்புக்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லமுறையில் முடியும். படித்த பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையில் இருந்துவந்த தொந்தரவுகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில், சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று புதிய வீடுகட்டும் திட்டம் நிறைவேறும். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆலயத் திருப்பணிகள் தடையின்றி நடக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி லாபம் பெருகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன் : இன்று வியாபாரிகள்நல்ல லாபம் பெறுவார்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் வந்துசேரும். சகோதரர்கள் சண்டை நீங்கி ஒன்றுகூடுவார்கள். அரசு ஊழியர்கள் பணிச்சுமையில் அவதிப்பட்டது மாறும். அலுவலகத்தில் கேட்டபடி மாறுதல் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில், சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று திட்டமிட்டபடி எதிர்காலத்தை அமைத்துக்கொள்வார்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த நண்பர்களை அடையாளம் கண்டு விலகுவீர்கள். காவல்துறை நடவடிக்கைகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று அலுவலகத்தில் எதிர்பார்த்தபடி பதவி வந்துசேரும். பெண்கள் லாபம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, பெற்றோர்களின் பாராட்டைப் பெறுவார்கள். தூர தேசத்திலிருந்து வரும் செய்தி காதிற்கு இனிமையாக அமையும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9கும்பம் கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று இறை வழிபாடு செய்யவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். போட்டி வியாபாரிகள் ஒதுங்கிப்போவார்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். இதுவரை உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த பிள்ளைகளின் மனநிலை மாறும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5மீனம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில், சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று நல்ல வேலை வாய்ப்பை அடைவீர்கள் . குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவுக்கு வரும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் போடும்முன் சக நண்பர்களைக் கலந்து செய்யும் முடிவு லாபத்தைத் தரும். எதிர்பார்த்தபடி வெளிநாடு செல்வீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 சனிப் பெயர்ச்சி ப லன்கள் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொ ள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்... newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it