18-11-2019-newstm-dwstm-daily-astrology

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
18-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை - 02
திங்கட்கிழமை
சஷ்டி மாலை 4.02 மணி வரை. பின் ஸப்தமி
பூசம் இரவு 9.46 மணி வரை பின் ஆயில்யம்
சித்த யோகம்
நாமயோகம்: சுப்ரம்
கரணம்: வணிஜை
அகஸ்: 28.45
த்யாஜ்ஜியம்: 0.40
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 5.20
சூரிய உதயம்: 6.13
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கரிநாள்.
திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடாணை, திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
சூரியன் விசாகம் 4ம் பாதம் - பகை
சந்திரன் கடகம் - ஆட்சி
செவ்வாய் சித்திரை 4ம் பாதம் - நட்பு
புதன் சுவாதி 2ம் பாதம் - நட்பு
குரு மூலம் 2ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் கேட்டை 3ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு
கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 கிரகநிலை: ராசியில் ராஹூ - குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். உன்னதமான செயல்களில் ஈடுபடுவீர்கள். மனம் அமைதியில் லயிக்கும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 கிரகநிலை: ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடும். மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும். குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 கிரகநிலை: ராசியில் செவ்வாய், புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 கிரகநிலை: ராசியில் சூர்யன், சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் - புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 கிரகநிலை: ராசியில் குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் ராஹு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். நேரத்திற்கு உணவு உண்ணுங்கள். முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறைய லாம். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
newstm.in