1. Home
  2. ஜோதிடம்

18-09-2018 தினப்பலன் - இன்று பலத்த மழை பெய்யும் என்கிறது பஞ்சாங்கம் - உஷார்!

18-09-2018 தினப்பலன் - இன்று பலத்த மழை பெய்யும் என்கிறது பஞ்சாங்கம் - உஷார்!

18-09-2018-newstm-daily-free-astrology

18-09-2018 தினப்பலன் - இன்று பலத்த மழை பெய்யும் என்கிறது பஞ்சாங்கம் - உஷார்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I புரட்டாசி 02 I இங்கிலீஷ்: 18 September 2018 I செவ்வாய்க்கிழமை

நவமி இரவு 10.44 மணி வரை. பின் தசமி I மூலம் பகல் 11.09 மணி வரை. பின் பூரா டம் I சௌபாக்யம் நாமயோகம்

பாலவம் கரணம் I அமிர்த யோகம் I தியாஜ்ஜியம்: 39.01 I அகசு: 30.07

நேத்ரம்: 2 I ஜீவன்: 1/2 I கன்னி லக்ன இருப்பு: 8.02 I சூர்ய உதய ம்: 6.06

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு: இன்று கீழ்நோக்கு நாள் I கேதார விருதாரம்பம் I நாட்டரச ன் கோட்டை ஸ்ரீஎம்பெருமான் பவனி I இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு

திதி: நவமி I சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்

புரட்டாசி மாதம் பிறந்துவிட்டது... புரட்டாசி ஏன் பெருமாளுக்கு உகந்தது தெரியுமா?

மேஷம்:  கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 தமிழ் மாத ஜோதிடம்... புரட்டாசி மாதம் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!ரிஷபம்:  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உத்யோகஸ்தர்கள் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9மிதுனம்:  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சனி, சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சக தொழிலாளர்களின் உதவியால் முன்னேற்றம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 புரட்டாசி மாதம் பிறந்தவங்களே இப்படித்தான்!கடகம்:  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேதுஎன கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும். தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7சிம்மம்:  கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ரஜினியின்  2.0 பொங்கலுக்கும் வராதா? அமெரிக்காவில் சிக்கிய அதிர்ச்சித் தகவல்!கன்னி:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி, சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும் போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9துலாம்:  கிரகநிலை: ராசியில் குரு, சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப் புறக்கணித்த சொந்தபந்தம், நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவர்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 தாமிரபரணி பாழாகும்... மஹா புஷ்கரத்துக்கு எதிராக சமூக ஆர்வலர்கள்!விருச்சிகம்:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராளச் செலவில் நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 குளிச்சி முடித்ததும் முதலில் தலையைத் துவட்டக் கூடாது ஏன் தெரியுமா?தனுசு:  கிரகநிலை: ராசியில் சனி, சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று புத்திரர் நன்கு படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு. உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5மகரம்:  கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று கணிசமாக அளவில் கையிருப்பு உயரும். வெளியூர் பயணத்தை லாபநோக்கில் நடத்தி வெற்றி காண்பீர்கள். திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் தெரிவிக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 உங்கள் ராசிக்கான இந்த வார பலன்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!கும்பம்:  கிரகநிலை: களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உங்களது மேலான யோசனைகளை உங்கள் உயரதிகாரிகள் ஏற்பார்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறும். எனினும் வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 உங்கள் நட்சத்திரத்தை வைத்தே நீங்க எப்படிபட்டவர் என்று சொல்லலாம்! - பகுதி 1மீனம்:  கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சனி, சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

newstm.in

Trending News

Latest News

You May Like