1. Home
  2. ஜோதிடம்

17-8-2018 தினப்பலன் - ஆவணி முதல்நாள் எப்படி இருக்கப் போகிறது?

17-8-2018 தினப்பலன் - ஆவணி முதல்நாள் எப்படி இருக்கப் போகிறது?

17-8-2018-newstm-daily-free-astrology

17-8-2018 தினப்பலன் - ஆவணி முதல்நாள் எப்படி இருக்கப் போகிறது?

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I ஆவணி 01 I இங்கிலீஷ்: 17 August 2018 I வெள்ளிக்கிழமை

ஷஷ்டி காலை 6.37 மணி வரை. பின் ஸப்தமி I சுவாதி இரவு 10.00 மணி வரை. பின் விசாகம்

சுப்ரம் நாமயோகம் I தைதுலம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 54.12 I அகசு: 30.52

நேத்ரம்: 1 I ஜீவன்: 1/2 I சிம்ம லக்ன இருப்பு: 8.12 I சூ ர்ய உதயம்: 6.06 I ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்

குறிப்பு: இன்று சமநோக்கு நாள் I சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம் I திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் புறப்பாடு.

திதி: சூன்ய திதி I சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி

இன்று ஆவணி மாதம் பிறக்கிறது... உங்கள் ராசிக்கான ஆவணி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்... சந்திராஷ்டம தினங்கள்

மேஷம்  கிரகநிலை:  சுக ஸ்தானத்தில் புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7 இதைப் படிச்சீங்களா?  ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி!ரிஷபம்  கிரகநிலை:  தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று வீண் அலைச்சல் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன் றும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5மிதுனம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவு படுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6கடகம்  கிரகநிலை:  ராசியில் புதன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 3 இதைப் படிச்சீங்களா? உங்கள் நட்சத்திரத்தை கிளிக் செய்யுங்கள்... நீங்கள் யார் என்று சொல்கிறோம்!சிம்மம்  கிரகநிலை:  ராசியில் சூர்யன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3, 9 இதைப் படிச்சீங்களா?  பாரத ரத்னா யாருக்கு? மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்!கன்னி  கிரகநிலை:  ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். மனோதைரியம் உண்டாகும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 6 இதைப் படிச்சீங்களா? பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்!துலாம்  கிரகநிலை:  ராசியில் சந்திரன், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று அந்நிய நபர் களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 4, 6விருச்சிகம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7 இதைப் படிச்சீங்களா? கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி! தனுசு  கிரகநிலை:  ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 7மகரம்  கிரகநிலை:  ராசியில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். பிரச்னைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5கும்பம்  கிரகநிலை:  ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று பலவித நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 4மீனம்  கிரகநிலை:  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 7, 9

newstm.in

Trending News

Latest News

You May Like