1. Home
  2. ஜோதிடம்

17-7-2018 தினப்பலன் - ஆடி மாதத்தின் முதல்நாள் எப்படி இருக்கப் போகிறது?

17-7-2018 தினப்பலன் - ஆடி மாதத்தின் முதல்நாள் எப்படி இருக்கப் போகிறது?

daily-free-astrology-17-7-2018

17-7-2018 தினப்பலன் - ஆடி மாதத்தின் முதல்நாள் எப்படி இருக்கப் போகிறது?

கணித்தவர் : பா.பிரவீன் குமார்

தினப்பலன் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 01 I இங்கிலீஷ்: 17 July 2018 I செவ்வாய்க்கிழமை

பஞ்சமி இரவு 10.14 மணி வரை. பின் ஷஷ்டி I பூரம் மாலை 3.20 மணி வரை. பின் உத்திரம்

வரியான் நாமயோகம் I பவம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 40.37 I அகசு: 31.24

நேத்ரம்: 1 I ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 8.13 I சூர்ய உதயம்: 6.01

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30

சூலம்: வடக்கு I பரிகாரம்: பால் I கு றிப்பு: இன்று கீழ் நோக்கு நாள்

நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் உற்சவம். தங்கச் சப்பரத்தில் பவனி.

திதி: சூன்யதிதி I சந்திராஷ்டமம்: தி ருவோணம், அவிட்டம்

ஆடி மாத பலன்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்...

மேஷம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று நீண்ட நாளைய நண்பரைப் பிரிய வேண்டி வரலாம். அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் அரவணைப்பையும் பாராட்டையும் பெறுவார்கள். உடன் பணிபுரியும் பெண் ஊழியர் களிடம் எச்சரிக்கை தேவை. பணப்புழக்கம் கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன் : இன்று நல்ல பலன்களை அடைவீர்கள். தங்கள் பெண்களுக்காக வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். மனைவிக்கு கணவரின் பாராட்டுகள் அளவில்லா மகிழ்ச் சியைத் தரும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியில் இருந்து வந்த மந்தம் மாறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7மிதுனம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். பணியில் தடை ஏற்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று விலகியிருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். காலங்காலமாய் இருந்துவந்த பங்காளி சண்டை முடிவுக்கு வரும். விவசாயிகள் எதிர்பார்த்தபடி விவசாயத் தைத் தொடங்குவார்கள்; நல்ல மகசூலும் பெறுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலை நடவடிக்கைகளை நேரடியாக கவனித்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் அதிக கொள் முதல் செய்யாமல் இருப்பது நல்லது. முக்கிய பிரச்சினைகள் காரணமாக வெளியூர் சென்றுவர வேண்டியிருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9கன்னி கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று பெரும் முதலீடுகளைத் தவிர்க்கவேண்டும். வீடு, மனை விருத்தி செய்யும் திட்டங்களைத் தள்ளிவைக்க வேண்டும். கடன்பட நேரிடும். அந்த கடனே பெரும் சிரமத்தைக் கொடுக்கும். எனவே நிதிநிலைகளில் அதிக கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் நன்மையுண்டு. பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் தேடிவரும். வரன் தேடுவோருக்கு நல்ல வரன் வந்து சேரும். நல்ல வரனாகத் தெரிந்தாலும் ஒன்றுக்கு மூன்றுமுறை விசாரிக்க வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று அரசு ஊழியர்களின் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளின் தயவும் பாராட்டும் உண்டு. தொழிலதிபர்களுக்கு வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். உற்பத்தி பெருகும். வியாபாரிகளுக்கு போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் குரு - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று வியாபாரம் பெருகும். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். குடும்பத்தில் ஆரோக்கியம் கூடுதலாகும். உங்களைப் பிரிந்திருந்த உறவுகள் வந்துசேர்வார்கள். சில இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மந்தநிலை மாறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த அனைத்து சங்கடங்களும் விலகி, இம்மாதம் முழுவதும் நல்ல பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். வாகனம் வாங்கும் திட்டம் நினைத்தபடி நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கும்பம் கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று கணவன்- மனைவி ஒற்றுமையில் பிணக்குகள் வராது. புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். தடைப்பட்ட ஆலயத் திருப்பணிகள் தடையின்றி முடியும். வழக்குகள் சாதகமாக முடியும். தொல்லை கொடுத்துவந்த பிள்ளைகள் நல்லவர்களாக மாறுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மீனம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். அரசு ஊழியர்கள் உற்சாகமாகப் பணிபுரிவார்கள். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் வந்துசேரும். சிலர் ஆர்டர் நிமித்தம் வெளிநாடு சென்று வருவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

newstm.in

Trending News

Latest News

You May Like