1. Home
  2. ஜோதிடம்

17-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

17-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

17-09-2019-newstm-daily-astrology

17-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

கணித்தவர் : Newstm Desk

17-Sep-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது ஆவணி - 31
செவ்வாய்கிழமை

திரிதியை மாலை 3.27 மணி வரை. பின் சதுர்த்தி
அசுபதி மறு நாள் காலை 6.06 மணி வரை பின் அசுபதி தொடர்கிறது.
சித்த யோகம்
நாமயோகம்: த்ருவம்
கரணம்: பத்ரம்

அகஸ்: 30.08
த்யாஜ்ஜியம்: 49.36
நேத்ரம்: 2
ஜீவன்: 1
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.13
சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஷடசீதி புண்ணிய காலம்.
சங்கடஹர சதுர்த்தி.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.
குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.
இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: சித்திரை
சூரியன்
உத்திரம் 1ம் பாதம் - ஆட்சி
சந்திரன்
மேஷம் - பகை
செவ்வாய்
பூரம் 4ம் பாதம் - பகை
புதன்
ஹஸ்தம் 3ம் பாதம் - ஆட்சி - உச்சம்
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
உத்திரம் 4ம் பாதம் - நீசம்
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் புதன், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கைத்துணை வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -  லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 கடகம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாக வும் பாடங்களை படிப்பது அவசியம். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5சிம்மம்: கிரகநிலை: ராசியில்  சூர்யன், செவ்வாய் -    குடும்ப ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6கன்னி: கிரகநிலை: ராசியில் புதன்,  சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்   ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6துலாம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது- களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.  இடமாற்றத்துடன்  பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - ரண,ருண ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள்  விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும் அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திறமை வெளிப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9மகரம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ, - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்-  லாப ஸ்தானத்தில்  குரு- அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மனஅமைதி உண்டாகும். இழுபறியாக பாதியில்  நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய  காரியத்தை நிறைவேற்ற  தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5கும்பம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹு - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது -  என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6மீனம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்-   பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

newstm.in

Trending News

Latest News

You May Like