1. Home
  2. ஜோதிடம்

17-09-2018 தினப்பலன் - வாரத்தின் முதல்நாள் வெற்றிகரமாக இருக்கும்!

17-09-2018 தினப்பலன் - வாரத்தின் முதல்நாள் வெற்றிகரமாக இருக்கும்!

17-09-2018-newstm-daily-free-astrology

17-09-2018 தினப்பலன் - வாரத்தின் முதல்நாள் வெற்றிகரமாக இருக்கும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன்! இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக, சிறப்பானதாக இருக்க நியூஸ்டிஎம்-ன் வாழ்த்துக்கள்!

இன்று புரட்டாசி 1ம் தேதி... புரட்டாசி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

மேஷம்:   கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர். மாணவர்கள் படிப்பில் மந்தநிலை நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 உங்கள் ராசிக்கான இந்த வார பலன்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!ரிஷபம்:   கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று அரசியல்வாதிகளுக்கு  மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 மேஷம் முதல் மீனம் வரை... ராஜயோகம் தரும் சனிப் பெயர்ச்சி பலன்கள் (2020ம் ஆண்டு வரை...) மற்றும் பரிகாரங்கள்!மிதுனம்:  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக  நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது  நன்மை தரும்.  திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கடகம்:  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேதுஎன கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். தொழிலில் திறமை அதிகரிக்கும். உபதொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மறக்க முடியாத ஆசிய கோப்பை போட்டிகள்சிம்மம்:  கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான  நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன்  செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று  தாமதமாகலாம். மனதில் இருந்த  கவலையை போக்கி நிம்மதி  கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கன்னி:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 உங்கள் நட்சத்திரத்தை வைத்தே நீங்க எப்படிபட்டவர் என்று சொல்லலாம்! - பகுதி 1 உங்கள் நட்சத்திரத்தை வைத்தே நீங்க எப்படிபட்டவர் என்று சொல்லலாம்! - பகுதி 2துலாம்:  கிரகநிலை: ராசியில் குரு, சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர்.  புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9விருச்சிகம்:  கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி தங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 அழகிரி அலர்ஜி... பேட்ட ஷூட்டிங்கை லக்னோவுக்கு மாற்றிய ரஜினி!தனுசு:  கிரகநிலை: ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மகரம்:  கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5கும்பம்:  கிரகநிலை: களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9மீனம்:  கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 இன்றைய பஞ்சாங்கம்! விளம்பி வருஷம்  I  தக்ஷிணாயணம்  I  வர்ஷருது  I  புரட்டாசி 01  I  இங்கிலீஷ்: 17 September 2018  I  திங்கள்கிழமை அஷ்டமி  இரவு 9.06 மணி வரை. பின் நவமி  I  கேட் டை காலை 9.05 மணி வரை. பின் மூலம் ஆயுஷ்மான் நாமயோகம்  I  பத்ரை கரணம்  I  சித்த யோகம்  I  தியாஜ்ஜியம்: 29.12 அகசு: 30.08  I  நேத்ரம்: 1  I  ஜீவன்: 1/2  I  கன்னி ல க்ன இருப்பு: 8.06  I  சூர்ய  உதயம்: 6.06 ராகு காலம்: காலை 7.30 - 9.00  I  எமகண்டம்: காலை 10.30 - 12.00  I  குளிகை: மதியம் 1.30 - 3.00   I  சூலம்: கிழக்கு   I  பரிகாரம்: தயிர்  குறிப்பு: இன்று சமநோக்கு நாள்  I  ஷடசீதி புண் ணிய காலம்  I  தூர்வாஷ்டமி, ஜேஷ்டாஷ்டமி, லட்சுமி விருதாரம்பம் திதி: சூன்ய திதி  I  சந்திராஷ்டமம்: ரோகிணி

newstm.in

Trending News

Latest News

You May Like