(17-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்
(17-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, புதன் - சுகஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று உங்களுக்கு புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தேவையானவை தக்க நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கிரகநிலை:
ராசியில் சுக்ரன், சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில் ராஹூ, புதன் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உங்களுக்கு ஏற்படும். திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கிரகநிலை:
ராசியில் ராஹூ, புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கிரகநிலை:
ராசியில் சூரியன் - ரண, ருண ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ, புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ, புதன் - விரைய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ, புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு: வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று உங்கள் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு, புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். நீண்டநாட்களாக நிலுவையில் இருந்த பண உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கிரகநிலை:
ராசியில் கேது, குரு (வ), சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு, புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ, புதன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ, புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனை பெறுவீர்கள். இரக்கசிந்தனை உண்டாகும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ, புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9