17-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்ளுக்கு புது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன்

17-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்ளுக்கு புது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது
X

17-05-2019-newstm-daily-astrology

17-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்ளுக்கு புது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

16-May-19 | விகாரி வருஷம் | உத்தராயணம்
வஸந்தருது | வைகாசி - 02 | வியாழக்கிழமை

துவாதசி மறு நாள் காலை 7.42 மணி வரை. பின் திரயோதசி
சித்திரை மறு நாள் காலை 4.09 மணி வரை பின் ஸ்வாதி
சித்த யோகம் | நாமயோகம்: ஸித்தி | கரணம்: பாலவம்

அகஸ்: 31.16 | த்யாஜ்ஜியம்: 17.20 | நேத்ரம்: 2 | ஜீவன்: 1
ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 5.01 | சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 | எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30 | சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு: இன்று சம நோக்கு நாள்
பரசுராமத்துவாதசி.
பிரதோஷம்.
காட்டுபரூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம்.
பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
சுபமுகூர்த்த தினம்

திதி: சூன்ய
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

சூரியன் கிருத்திகை 2ம் பாதம் பகை
சந்திரன் கன்னி நட்பு
செவ்வாய் மிருகசீரிஷம் 4ம் பாதம் நட்பு
புதன் கிருத்திகை 3ம் பாதம் நட்பு
குரு மூலம் 1ம் பாதம் ஆட்சி
சுக்ரன் அசுபதி 2ம் பாதம் நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் நட்பு
ராகு புனர்பூசம் 2ம் பாதம் நட்பு
கேது பூராடம் 4ம் பாதம் நட்பு

இன்று உங்கள் பேச்சில் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். மிக கவனமுடன் இருக்கவும். வருமானம் நல்லபடியாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9இன்று வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடமோ அல்லது சக ஊழியர்களிடமோ கவனமாக வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவது அவசியம். உங்கள் வார்த்தையே உங்களுக்கு எதிரியாக மாறலாம்.  தொழில் தொடங்குவதற்கு இடம் பார்ப்பீர்கள்.தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். புது இடம் வாங்கி பத்திரப்பதிவு செய்ய சாதாகமான சூழல் உள்ளது. தொழிலில் புது உக்திகளை கையாள்வீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது. கலைத்துறையினர் கோபப்பட்டு பேசி பகைமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7இன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து சிறு உதவிகளைப் பெறலாம். அரசியல் துறையினருக்கு கட்சியில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.   அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று புது வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். நேரம் தவறாமல் உண்பதும், உறங்கச் செல்வதும் ஆரோக்யத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும்.முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9இன்று அக்கம்பக்கத்தினருடன் சண்டை போட்டு பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சிலருக்கு புதிய இடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதற்குத் தேவையான நிதி வசதிகள் கிடைக்கும். ஆரோக்யத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9இன்று குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு கட்சியில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9இன்று உடல் நலனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு அதனால் மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நெருங்கிய உறவினருக்கு உதவிகள் செய்வீர்கள். வரன் தேடும் முயற்சிகள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6இன்று எதிர்பாராத வகையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பெயர் புகழ் பெரும் அளவிற்கு ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வீர்கள். தொழில் ரீதியான முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். நன்மையே நடக்கும்.எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7இன்று வியாபாரத்திற்காகவோ அல்லது சொந்த பயன்பாட்டிற்காகவோ கடன் வாங்க வேண்டி வரும். அதிக வட்டிக்கு வாங்கி மாட்டிக்கொள்ள வேண்டாம். கவனம் தேவை. கலைஞர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.  புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7இன்று அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். கட்சியில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உங்களை அது பாதிக்காது. மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3இன்று பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். பணவரவிற்கு குறைவிருக்காது. வீண் செலவுகள் ஏற்படாது. குடும்பச் சூழ்நிலை மனநிறைவைத் தரும். சிலர் புது வீடு அல்லது நிலம் வாங்குவீர்கள். அதற்கான முயற்சிகளை செய்வது நல்லது.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

newstm.in

Tags:
Next Story
Share it