1. Home
  2. ஜோதிடம்

16-8-2018 தினப்பலன் - மேஷம் முதல் மீனம் வரை!

16-8-2018 தினப்பலன் - மேஷம் முதல் மீனம் வரை!

16-august-201-daily-free-astrology

16-8-2018 தினப்பலன் - மேஷம் முதல் மீனம் வரை!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 31 I இங்கிலீஷ்: 16 August 2018 I வியாழக்கிழமை

பஞ்சமி காலை 7.20 மணி வரை. பின் ஷஷ்டி I சித்திரை இரவு 9.42 மணி வரை. பின் சுவாதி

சுபம் நாமயோகம் I பாலவம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 53.10 I அகசு: 30.53

நேத்ரம்: 1 I ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப்பு: 6.10 I சூ ர்ய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு: இன்று சமநோக்கு நாள் I ஷஷ்டி விரதம் I மதுரை சோம சுந்தரக் கடவுள் நாரைக்கு முக்தியருளியக் காட்சி

திதி: ஷஷ்டி I சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

உங்கள் ராசிக்கான ஆவணி மாத ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்... சந்திராஷ்டம தினங்கள்

மேஷம்  கிரகநிலை:  சுக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 2, 9 இதைப் படிச்சீங்களா?  ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி!ரிஷபம்  கிரகநிலை:  தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டுபிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6மிதுனம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6கடகம்  கிரகநிலை:  ராசியில் சூர்யன்,புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் கவனமாக காரியங்களை செய்வதும் நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9, 3 இதைப் படிச்சீங்களா? உங்கள் நட்சத்திரத்தை கிளிக் செய்யுங்கள்... நீங்கள் யார் என்று சொல்கிறோம்!சிம்மம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7கன்னி  கிரகநிலை:  ராசியில் சந்திரன், சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன்மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 5, 6 துலாம்  கிரகநிலை:  ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று வீண்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5விருச்சிகம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்னைகளில் நல்ல முடிவு கிடைக்கும். சிக்கலான வேலைகளை முடிக்க எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தடை தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 7 இதைப் படிச்சீங்களா?  பாரத ரத்னா யாருக்கு? மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்!தனுசு  கிரகநிலை:  ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று பிரச்னைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். வீண்கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3மகரம்  கிரகநிலை:  ராசியில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5கும்பம்  கிரகநிலை:  ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6மீனம்  கிரகநிலை:  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்குமுன் அதுபற்றி பரிசீலிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 2

newstm.in

Trending News

Latest News

You May Like