1. Home
  2. ஜோதிடம்

16-6-2018 தினபலன் - தனுசு ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்!

16-6-2018 தினபலன் - தனுசு ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்!

daily-free-astrology-16-6-2018

16-6-2018 தினபலன் - தனுசு ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது

ஆனி 02 I இங்கிலீஷ்: 16 June 2018 I சனிக்கிழமை

திரிதியை இரவு 7.06 மணி வரை. பின் சதுர்த்தி I புனர்பூசம் பகல் 2.53 மணி வரை. பின் பூசம்

துருவம் நாமயோகம் I தைதுலம் கரணம் I சித்த யோகம்

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30

சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர் I இன்று சம நோக்கு நாள்

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதியில் ஸ்ரீகெருடாழ்வாருக்குத் திருமஞ்சன ஸேவை.

திதி: சூன்ய திதி I சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

மேஷம்

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

ரிஷபம்

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று சீரான பலனை காண்பீர்கள். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்

கிரகநிலை:

ராசியில் சூர்யன், புதன், சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று அதிகமாக சிரத்தை எடுத்து மேலிடத்திற்கு விஷயங்களை சொல்ல வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கடகம்

கிரகநிலை:

ராசியில் ராகு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

கன்னி

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன

பலன்:

இன்று இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்

கிரகநிலை:

ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்

கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

தனுசு

கிரகநிலை:

ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ப்ரவுண்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மகரம்

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கும்பம்

கிரகநிலை:

பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

மீனம்

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை என இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like