16-11-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு இன்று விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம்

16-11-2018-newstm-daily-free-astrology
கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
இன்றைய பஞ்சாங்கம்
விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I சரத்ருது I ஐப்பசி 30 I இங்கிலீஷ்: 16 November 2018 I வெள்ளிக்கிழமை
அஷ்டமி காலை 8.31 மணி வரை. பின் நவமி I அவிட்டம் பகல் 11.19 மணி வரை. பின் சதயம்
துருவம் நாமயோகம் I பவம் கரணம் I சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 32.29 I அகசு: 28.47 Iநேத்ரம்: 1I ஜீவன்: ½ I துலாம் லக்ன இருப்பு: 6.16 I சூர்ய உதயம்: 6.12
ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00 Iசூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:இன்று மேல் நோக்கு நாள் I கிருத யுகாதி. அக்ஷய நவமி. திருஇந்துளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் ரதோற்சவம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலர் விடயாற்று உற்சவம்.
திதி:நவமி Iசந்திராஷ்டமம்:ஆயில்யம்
உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...
மேஷம்: இன்று கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும் அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7ரிஷபம்: இன்று வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9மிதுனம்: இன்று கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ஏன் தெரியுமா? - திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்?கடகம்: இன்று காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். திடமான முடிவுடன் எந்த வேலையையும் செய்ய முடியும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9சிம்மம்: இன்று உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7கன்னி: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 ஆன்மிக கதை – கடவுள் இருக்கிறாரா.... இல்லையா?துலாம்: இன்று பெண்களுக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9விருச்சிகம்: இன்று புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த தயங்கமாட்டீர்கள். விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9தனுசு: இன்று மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 நோய் நீங்க பெரியவாளுடைய பிரிஸ்கிரிப்ஷன்மகரம்: இன்று புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5கும்பம்: இன்று விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மீனம்: இன்று நீங்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9newstm.in