1. Home
  2. ஜோதிடம்

16-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்ளுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்

16-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்ளுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்

16-05-2019-newstm-daily-astrology

16-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்ளுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

16-May-19 | விகாரி வருஷம் | உத்தராயணம்
வஸந்தருது | வைகாசி - 02 | வியாழக்கிழமை

துவாதசி மறு நாள் காலை 7.42 மணி வரை. பின் திரயோதசி
சித்திரை மறு நாள் காலை 4.09 மணி வரை பின் ஸ்வாதி
சித்த யோகம் | நாமயோகம்: ஸித்தி |
கரணம்: பாலவம்

அகஸ்: 31.16 | த்யாஜ்ஜியம்: 17.20 | நேத்ரம்: 2 | ஜீவன்: 1
ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 5.01
சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 | எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு: இன்று சம நோக்கு நாள்
பரசுராமத்துவாதசி.
பிரதோஷம்.
காட்டுபரூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம்.
பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
சுபமுகூர்த்த தினம்

திதி: சூன்ய
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

சூரியன் கிருத்திகை 2ம் பாதம் - பகை

சந்திரன் கன்னி நட்பு
செவ்வாய் மிருகசீரிஷம் 4ம் பாதம் நட்பு
புதன் கிருத்திகை 3ம் பாதம் நட்பு
குரு மூலம் 1ம் பாதம் ஆட்சி
சுக்ரன் அசுபதி 2ம் பாதம் நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் நட்பு
ராகு புனர்பூசம் 2ம் பாதம் நட்பு
கேது பூராடம் 4ம் பாதம் நட்பு

இன்று நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது  கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையிணருக்கு உற்சாகம் கரை புரண்டோடும். சிலர் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். கலைஞர்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல் வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் நன்மையே ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9இன்று மனதில் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குழப்பத்தில் தவறான முடிவுகள் ஏற்பட்டு கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எனவே கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம்  அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9இன்று பொருளாதார நிலை நல்லபடியாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு திருப்திகரமாக இருக்கும். நல்ல சூழ்நிலைகள் இன்று அமையும். எடுத்த காரியத்தை பட்டென முடித்து விடுவீர்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7இன்று நன்மைகள் அதிகம் நடைபெறக் கூடிய நாள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படும். கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு பண வரவு நல்ல படியாக இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு வெற்றிகள் குவியும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7இன்று மனதில் நம்பிக்கை உண்டாகும்.  உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். மூலம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். உத்யோகஸ்தர்களுக்க்கு அலுவலகத்தில் கடின உழைப்பு இருக்கும். என்றாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு உற்பத்தியும், வியாபாரமும் சிறப்பாக இருக்கும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6இன்று  போட்டிகள் இருக்கும். எனினும் அதைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினர் சற்று பாடுபட்டு உழைக்க வேண்டி இருக்கும். தங்களின் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். முதலீடுகளில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3இன்று வருமானம் நல்லபடியாக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படுவதினால் நிம்மதி குறைந்து காணப்படும். கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். கவனம் தேவை. வெகு நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளொன்றை வாங்குவீர்கள்.மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள்  சரியாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6இன்று திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கவலை வேண்டாம். பிரயாணம் செய்ய வேண்டி வரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9இன்று வியாபாரம் விஷயமாக இடமாற்றம் இருக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.  வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நடிகர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெகு நாட்களாக தடைபட்டிருந்த காரியம் இனிதே நடந்து முடியும்.செலவு அதிகரிக்கும். சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.  முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். மாணாவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். அதற்காக விண்ணப்பிக்கும் முயற்சியில் இறங்குவது நல்லது. வாகனத்தை பழுது பார்க்க வேண்டி வரும். செலவு உண்டு. அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7இன்று குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் மனநிம்மதி இருக்காது. வேலை பார்ப்பவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். கடன் வாங்கியிருப்பவர்களுக்கு தங்கள் கடனை திருப்பி செலுத்தும் நேரம் வரும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.  கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும். வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் ஒன்று நல்ல விதத்தில் வந்து சேரும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே கிடைக்கும். உடலில் சிறு உபாதை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. பெரிய செலவினங்களைக் குறைக்கலாம்.  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

newstm.in

Trending News

Latest News

You May Like