16-04-2019-newstm-daily-astrology

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
16-Apr-19 | விகாரி வருஷம் | உத்தராயணம்
வஸந்தருது | சித்திரை - 03 | செவ்வாய்கிழமை
துவாதசி இரவு 11.26 மணி வரை. பின் திரயோதசி
பூரம் இரவு 11.56 மணி வரை பின் உத்திரம்
சித்த யோகம் | நாமயோகம்: வ்ருத்தி | கரணம்: பவம்
அகஸ்: 30.39 | த்யாஜ்ஜியம்: 7.13 | நேத்ரம்: 2 | ஜீவன்: 1
மேஷ லக்ன இருப்பு (நா.வி): 4.19 | சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 | எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30 | சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு: இன்று கீழ் நோக்கு நாள்
வாமனத் துவாதசி.
கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் உற்ஸவாரம்பம்.
சமயபுரம் மாரியம்மன் ரதோற்ஸவம்.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை வேணுகோபாலர் திருக்கோலமாய்க் காட்சி.
திதி: துவாதசி.
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்
சூரியன் அசுபதி 1ம் பாதம் - உச்சம்
சந்திரன் சிம்மம் - பகை
செவ்வாய் ரோஹிணி 3ம் பாதம் - நட்பு
புதன் உத்திரட்டாதி 3ம் பாதம் - நீசம்
குரு மூலம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் பூரட்டாதி 3ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 3ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 3ம் பாதம் - நட்பு
கேது உத்தராடம் 1ம் பாதம் - நட்பு
இன்று மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடையவர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5இன்று தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள்.குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2, 9இன்று எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். எதிலும் எச்சரிக்கையும் கவனமும் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும்.பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குபலமுறை யோசிப்பதுநல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9இன்று .தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து சிந்தனை மேலோங்கும். உறவினர்கள், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9இன்று திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் தீர்க்கமான எண்ணமுடைய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் உற்சாகம் உண்டாகும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7இன்று திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். மற்றவர்களுக்காக போராடும் குணமுடையவர்கள் நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
newstm.in