16-10-2021 - இன்றைய ராசி பலன் - இந்த ராசிக்கு மகிழ்ச்சியை தரப்போகும் நாளாக அமையும்..!!
இன்று சொத்து தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்து வந்த மன குழப்பம் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
இன்று துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் காரிய தடை ஏற்பட்டாலும் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
இன்று உடல் சோர்வும், மன குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.
இன்று எதிர்பாராத பண உதவிகளும் கிடைக்கும். கடும் ஜுரம், விவாதங்கள், கலகம், அடுத்த வீட்டாருடன் சதா சண்டை இவை நேரும். கவனமாக இருக்கவும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். யாருடைய தூண்டுதலுக்கும் செவி சாய்க்காதீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல விதமாக பண வசதிகள் அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
இன்று தடை பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பொருள்வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் தொடரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். இனிமையாக பேசுவதில் வல்லவரான நீங்கள் காரியங்களை சாதித்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
இன்று நாலில் உலவும் ராசிநாதன் சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். பயணங்களால் பயன் கிடைக்கும். வங்கிகளில் சேமிப்புகள் உயரும். விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
இன்று தெய்வ காரியங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். பெற்றோரின் உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்களிடம் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நிலம் வீடு சம்பந்தமாக உள்ள முயற்சிகள் கைகூடும். பெண்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு நிரந்தமாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்களது திறமைகளை காட்ட வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவார்கள். தடைப்பட்டு பாதியில் நின்ற தொழில் கட்டுமானம் தற்போது முடிவடையும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளை வசமாக்கும் நூதன கவர்ச்சி தெரியும். அனைவரும் உங்கள் வழிக்கு வருவார்கள். எதையும் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
இன்று குழந்தைகளால் நன்மை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் அமைதி குறையும். எல்லா விதத்திலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பங்கு மார்க்கெட் நல்ல லாபத்தை தரும். அரசியல்வாதிகளுக்கு பெண்கள் உதவியால் உயர் பதவி கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலமும் லாபமும் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
இன்று அனைத்து விதங்களிலும் நன்மைகளையே பெறும் கிரக காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். கவனம் தேவை. தொழில் வளம் பெருகும். குடும்ப பிரச்ச்னைகளும் முடிவுக்கு வரும். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மையை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
இன்று நற்செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள். வீடு நில புலன்கள் உங்களை வந்தடையும். அதிலுள்ள பிரச்சனைகளும் தீரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. வியாபாரிகள் வெளிநாட்டு பயணம் செல்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9