15-7-2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் - பஞ்சாங்கம்!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்.

15-7-2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் - பஞ்சாங்கம்!
X

today-free-astrology-15-7-2018

15-7-2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் - பஞ்சாங்கம்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது I ஆனி 31 I இங்கிலீஷ்: 15 July 2018 I ஞாயிற்றுக்கிழமை

திரிதியை இரவு 2.12 மணி வரை. பின் சதுர்த்தி I ஆயில்யம் மாலை 5.53 மணி வரை. பின் மகம்

சித்தி நாமயோகம் I தைதுலம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 3.27 I அகசு: 31.26

நேத்ரம்: 0 I ஜீவன்: 1/2 I மிதுன லக்ன இருப்பு: 6.08 I சூர்ய உதயம்: 6.01

ராகு காலம்: மாலை 4.30 - 6.00 I எமகண்டம்: மதியம் 12.00 - 1.30 I குளிகை: மதியம் 3.00 - 4.30

சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம் I குறிப் பு: இன்று கீழ் நோக்கு நாள்

திருவண்ணாமலை ஸ்ரீ சிவபெருமான் பவனி. I திதி: திரிதியை I சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

மேஷம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று உத்தியோகஸ் தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6ரிஷபம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் பாதிப்புகள் மட்டுமின்றி அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு மனஅமைதியும் குறையும். பொருளாதாரநிலையிலும் தடைகள் ஏற்படுவதால் குடும்பத்தேவை களைப் பூர்த்தி செய்ய திண்டாட வேண்டியிருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7மிதுனம் கிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று பணப் பற்றாக்குறை யினால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். தொழில், வியாபாரத்திலும் மந்தநிலை ஏற்பட்டு பொருள் தேக்கமடையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் வீண்பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். எந்தவொரு புதிய முயற்சிகளில் ஈடுபடும்போதும் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரியநேரிடும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5சி ம்மம் கி ரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்துப் பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். பிரமாதமான அனுகூலங்களை அடைவீர்கள். கடந்தகால பிரச்னைகள் குறையும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5கன்னி கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் குறையும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களின் பெயர், புகழ், அதிகரிக்கும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். உற்றார்-உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆர்டர்கள் குவியும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமானநிலை ஏற்படும். அரசியலில் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். மாண்புமிகு பதவிகளும் தேடிவரும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களைச் சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று கணவன்-மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகளில் சுமாரான நிலை உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்-வாங்கல் ஓரளவுக்கு திருப்தியளிக்கும் என்றாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9கும்பம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் கடன்களால் நெருக்கடிகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் சில தடைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் சுமாரான வேலை வாய்ப்பினைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9மீனம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பணியில் திருப்தியான நிலையினை அடையமுடியும். மேடைப்பேச்சுகளில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கினை அடைந்துவிடமுடியும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

newstm.in

Tags:
Next Story
Share it