1. Home
  2. ஜோதிடம்

15-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

15-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

15-12-2018-newstm-daily-free-astrology

15-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் Iதக்ஷிணாயணம் Iசரத்ருது Iகார்த்திகை 29 Iஇங்கிலீஷ்: 15 December 2018 I சனிக்கிழமை

அஷ்டமி மறு நாள் காலை 3.12 மணி வரை. பின் நவமி Iபூரட்டாதி இரவு 10.58 மணி வரை. பின் உத்திரட்டாதி

ஸித்தி நாமயோகம் Iபத்ரை கரணம் Iமரண யோகம்

தியாஜ்ஜியம்: -அகசு: 28.27 Iநேத்ரம்: 1 I ஜீவன்: ½ I விருச்சிக லக்ன இருப்பு: 6.31 I சூர்ய உதயம்: 6.27

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு:இன்று கீழ்நோக்கு நாள் Iமைதுலாஷ்டமி Iஆவுடையார் கோவில் ஸ்ரீமாணிக்கவாசகர் முதலமைச்சர் கோலமாய் காக்ஷியருளல்.

திதி: அஷ்டமி Iசந்திராஷ்டமம்: மகம், பூரம்

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்: இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.  பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9ரிஷபம்: இன்று அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே  அடிக்கடி  வாக்குவாதங்கள் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6மிதுனம்: இன்று கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது  நல்லது. அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)கடகம்: இன்று சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.  அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6சிம்மம்: இன்று கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை.  உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும்.  உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6கன்னி: இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  காரிய வெற்றி உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்துலாம்: இன்று தொழில் தொடர்பான  பிரச்சனைகள் தீரும். முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது  நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. பணத்தேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் தாமதப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9விருச்சிகம்: இன்று வேலைப்பளு வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்யம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வார்த்தைக்கு  மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9தனுசு: இன்று சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்.  உங்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6 வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்மகரம்: இன்று எதிர்ப்புகள் விலகும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன்  செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம். செலவும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6கும்பம்: இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை. சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது  நல்லது. எதிலும் நிதானம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6மீனம்: இன்று பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும். ஆசிரியர்களிடம் இருந்து வரும் நல்லுறவு நீடிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9    

newstm.in

Trending News

Latest News

You May Like