1. Home
  2. ஜோதிடம்

15-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்ளுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

15-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்ளுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

15-05-2019-newstm-daily-astrology

15-05-2019- தினப்பலன்: இன்று இந்த ராசிக்காரர்ளுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

15-May-19 | விகாரி வருஷம் | உத்தராயணம்
வஸந்தருது | வைகாசி - 01 | புதன்கிழமை

ஏகாதசி காலை 9.47 மணி வரை. பின் துவாதசி
உத்ரம் காலை 6.30 மணி வரை பின் ஹஸ்தம்.
ஹஸ்தம் மறு நாள் காலை 5.10 மணி வரை. பின்னர் சித்திரை
அமிர்த யோகம் | நாமயோகம்: வஜ்ரம் | கரணம்: பத்ரம்

அகஸ்: 31.15 | த்யாஜ்ஜியம்: 21.20 | நேத்ரம்: 2 | ஜீவன்: 0
ரிஷப லக்ன இருப்பு (நா.வி): 5.11 | சூரிய உதயம்: 5.54

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 | எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00 | சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு: இன்று சம நோக்கு நாள்.
விஷ்ணுபதி புண்ணிய காலம்.
ஸர்வ ஏகாதசி.
வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் விடாயாற்று உற்ஸவம்.
மஞ்சள் நீராட்டு விழா.

திதி: சூன்ய
சந்திராஷ்டமம்: பூரட்டாதி

சூரியன் கிருத்திகை 1ம் பாதம் - உச்சம்
சந்திரன் கன்னி - நட்பு
செவ்வாய் மிருகசீரிஷம் 4ம் பாதம் - நட்பு
புதன் கிருத்திகை 3ம் பாதம் - நட்பு
குரு மூலம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் அசுபதி 2ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 2ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 4ம் பாதம் - நட்பு

இன்று யாரிடமும் கோபப் பட்டு பேச வேண்டாம். பிறர் சாதாரணமாக அறிவுரை கூறினால் கூட அது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும். அத்தகைய குணத்தை விட்டொழியுங்கள். தியானம் செய்யுங்கள். மனதிற்கு நிம்மதி கிடைக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.  காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து  உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7இன்று பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். முக்கிய விஷயங்களை பற்றி பேசலாமா வேண்டாமா என்ற குழப்பமே நீண்ட நேரமாக இருந்து தொல்லையில் ஆழ்த்தும்.  தொழில் ரீதியான படிப்புகளை தொடரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும். பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள்  அனுகூலமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5இன்று உடல் நலனில் கவனம் தேவை. சக ஊழியர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள்.  உள்ளது உள்ளபடி பேசுவதற்கு முற்படுவீர்கள். சில நேரங்களில் குடும்பத்தாருடன் மனக் கசப்பு உருவாகலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9இன்று தங்களது அஜாக்கிரதையால் பொருள்கள் களவு போகக் கூடும். புதிதாக வாகனம் வாங்கவேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதை தள்ளிப் போடுவது நன்மையாகும். வருமானத்தில் குறைவு வராது. தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பெருமை சேரும். சகோதர, சகோரதரிகளிடம் வேற்றுமை பார்க்காமல் இருந்தாலும் அவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த  ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5இன்று வெற்றிகரமாக அதிர்ஷ்டமான நாள். உங்கள் போக்கில் தைரியமும், தன்னம்பிக்கையும் தென்படும். சிலரால் உங்களை புரிந்து கொள்ள முடியாது. உங்களை வெற்றிபாதைக்கு உங்கள் மீது நம்பிக்கை வைத்த பெரியோர் அழைத்துச் செல்வர். தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.   சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6இன்று உற்சாகமான நாள். நல்ல நாள். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள். நன்மையை பெற அதிகமாக உழைப்பீரக்ள். மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை மேற்கொள்வீர்கள்.எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பரிவர்த்தனை பெற்று செய்வதால் பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம்  செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6இன்று சந்தோசத்திற்கு குறைவிருக்காது. சூழல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும். பணிக்குச் செல்லும் ஊழியர்கள் தங்களின் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்.  கணவன், மனைவிக்கிடையே  ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளுக்காக  செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.  உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.  பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும்.  கடன் பிரச்சனை தீரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9இன்று மகிழ்ச்சியான நாள். கணவன் - மனைவியரிடையே பரஸ்பர அன்னியோன்யம் நிலவும். வேலை பார்க்கும் இடத்தில் தங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.   நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9இன்று ஆலய தரிசனம் மனதை ஒருநிலைப் படுத்தும். இது நாள் தடைப்பட்டிருந்த ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்தியத்தால் வெற்றியாக மாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள்  உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால்  காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம்  இருந்து கொண்டே இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9இன்று சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சுவார்த்தை நிகழும். சிலருக்கு ஆண் வாரிசு உண்டாகக் கூடிய வாய்ப்புள்ளது. பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடைபடத் தொடங்கும். மனதிற்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று வரும். திடீர் பணதேவை ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5இன்று நடக்கக்கூடிய நிகழ்வுகள் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். நீங்கள் நிதானத்தை கடைப்பிடித்து எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். அமைதியாக இருக்க தியானம் மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

newstm.in

Trending News

Latest News

You May Like