1. Home
  2. ஜோதிடம்

14-8-2018 தினப்பலன் - சாதகமான தினம் இன்று!

14-8-2018 தினப்பலன் - சாதகமான தினம் இன்று!

daily-free-astrology-14-8-2018

14-8-2018 தினப்பலன் - சாதகமான தினம் இன்று!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 29 I இங்கிலீஷ்: 14 August 2018 I செவ்வாய்க்கிழமை

திரிதியை காலை 10.05 ம ணி வரை. பின் சதுர்த்தி I உத்திரம் இரவு 10.27 மணி வரை. பின் ஹஸ்தம்

ஸித்தம் நாமயோகம் I கரஜை கரணம் I அமிர்த யோகம் I தியாஜ்ஜியம்: 0.33 I அகசு: 30.55 I நேத்ரம்: 0

ஜீவன்: 1/2 I கடக லக்ன இருப் பு: 6.18 I சூர்ய உதயம்: 6.06 I ராகு காலம்: மதியம் 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு: இன்று மேல்நோக்கு நாள் I சதுர்த்தி விரதம் I துர்கா கணபதி விரதம் I இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு

திதி: சதுர்த்தி I சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களைப் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்...

மேஷம்  கிரகநிலை:  சுக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.                                      பலன்கள்: இன்று தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5, 7 இதைப் படிச்சீங்களா? மெரினாவில் கருணாநிதி இடம் கொடுக்கலையா? காமராஜர் பேத்தி நியூஸ்டிஎம்-க்கு கொடுத்த எக்ஸ்குளுசிவ் பேட்டி - வீடியோரிஷபம்  கிரகநிலை:  தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9மிதுனம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்னையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கடகம்  கிரகநிலை:  ராசியில் சூர்யன்,புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7சிம்மம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்னை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6கன்னி  கிரகநிலை:  ராசியில் சந்திரன், சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9துலாம்  கிரகநிலை:  ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9விருச்சிகம்  கிரகநிலை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்கள்: இன்று கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் வேலைகளை செய்வது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 உங்கள் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! ஞாயிறு முதல் சனி வரை..!தனுசு  கிரகநிலை:  ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6மகரம்  கிரகநிலை:  ராசியில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3கும்பம்  கிரகநிலை:  ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக் கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7மீனம்  கிரகநிலை:  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்கள்: இன்று குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

newstm.in

Trending News

Latest News

You May Like