1. Home
  2. ஜோதிடம்

14-7-2018 தினப்பலன் - நான்கு ராசிகாரர்களுக்கு இன்று செலவு கூடும்!

14-7-2018 தினப்பலன் - நான்கு ராசிகாரர்களுக்கு இன்று செலவு கூடும்!

daily-free-astrology-14-7-2018

14-7-2018 தினப்பலன் - நான்கு ராசிகாரர்களுக்கு இன்று செலவு கூடும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

தினபலன் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது I ஆனி 30 I இங்கிலீஷ்: 14 July 2018 I சனிக்கிழமை

பிரதமை காலை 6.55 வரை பின் துவிதியை. துவி தியை மறு நாள் காலை 4.29 மணி வரை. பின் திரிதியை

பூசம் இரவு 7.25 மணி வரை. பின் ஆயில்யம் I ஹர்ஷணம் நாமயோகம் I பவம் கரணம் I சித்த யோகம்

அகசு: 31.26 I நேத்ரம்: 0 I ஜீவன்: 0 I மிதுன ல க்ன இருப்பு: 6.11 I சூர்ய உதயம்: 6.01

ராகு காலம்: காலை 9.00 - 10.30 I எமகண்டம்: மதியம் 1.30 - 3.00 I குளிகை: காலை 6.00 - 7.30 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று மேல் நோக்கு நாள் I திரு மயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.சந்திர தரிசனம்.

திதி: துவிதியை I சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

மேஷம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று வழக்கமான நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் இருக்காது. இன்றைக்கு பெண்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நிம்மதியற்ற நிலை ஏற்படலாம். எடுக்கும் காரியங்களிலும் தடைகள் உண்டாகும். உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், மாதவிடாய்க் கோளாறுகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9ரிஷபம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இன்று பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். புத்திரவழியில் வீண் செலவுகளும், மனசஞ்சலங்களும் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9மிதுனம் கிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.இன்று பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள் நிலவும் என்பதாலும் எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். தியானம் செய்து மன நிம்மதி பெறுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6கடகம் கிரகநிலை: ராசியில் ராகு, புதன்( வ), சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். ஆனால், உழைப்பிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று பொதுவாக கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6கன்னி  கிரகநி லை:  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்:  இன்று உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்களால் உடல்நிலை பாதிப்படையும். சேமிப்புக் குறையும். மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாதபடி மனம் அலைபாயும். மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தடைகள் உண்டாகும். தேவையற்ற நண்பர்களால் வீண் பிரச்னைகளை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று நன்மை, தீமை கலந்த பலன்களையே அடைவீர்கள். உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாகச் செய்து முடித்துவிட முடியும். சாதகமான பலன்களையும் அடையமுடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே வெற்றி கிட்டும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  ப லன்: இன்று அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சரளநிலை இருந்தாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். பணியில் திருப்தியான நிலையே நிலவும். சில நேரங்களில் வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று கூட்டாளிகளும் உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்பு, செரிமானக்கோளாறுகள் உண்டாகும். பணவரவுகளும் அளவுக்கதிகமாக எதிர்பார்க்க முடியாது. செலவுகள் கட்டுக்கிடங்கி இருப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9கும்பம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று கணவன்-மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பதே நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3மீனம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ), சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: இன்று பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. எந்தவொரு புதிய முயற்சியிலும் எதிர்நீச்சல்போட்டே முன்னேற வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

newstm.in

Trending News

Latest News

You May Like