1. Home
  2. ஜோதிடம்

14-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

14-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

14-12-2019-newstm-dwstm-daily-astrology

14-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை - 28
சனிக்கிழமை

துவிதியை காலை 10.15 மணி வரை. பின் திரிதியை
திருவாதிரை காலை 7.37 மணி வரை பின் புனர்பூசம்
சித்த யோகம்
நாமயோகம்: சுப்ரம்
கரணம்: கரஜை

அகஸ்: 28.27
த்யாஜ்ஜியம்: 32.04
நேத்ரம்: 2
ஜீவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 0.32
சூரிய உதயம்: 6.26


ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோவிலில் வரதராஜமுலவருக்குத் திருமஞ்சன ஸேவை.
தியாஜ்யம் எனக் குறித்திருக்கும் காலத்திற்கு மேல் 3.45 நாழிகை சுபகாரியங்கள் விலக்கவும்.
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: மூலம்


சூரியன் கேட்டை 4ம் பாதம் - பகை
சந்திரன் மிதுனம் - நட்பு
செவ்வாய் விசாகம் 1ம் பாதம் - நட்பு
புதன் கேட்டை 1ம் பாதம் - நட்பு
குரு மூலம் 3ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் பூராடம் 4ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ,  சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ,  சந்திரன்  -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு, சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: ராசியில்  ராஹூ,  சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்  -   களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது -   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வருங்கால சேமிப்புகளுக்கு சம்பாதிக்க சரியான நேரமிது. சின்ன சின்ன சுப செலவுகள் வரலாம். சுபவிரையங்கள் ஏற்படும். மிக நீண்ட நாட்களாக வராமல் இருந்த நல்ல செய்தி வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், புதன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன்,  குரு, சனி , கேது -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ,  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -   லாப ஸ்தானத்தில்  ராஹூ,  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். நல்ல செலவு செய்வீர்கள். வீடு வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். மருத்துவத்திற்கு சிறிது செலவு செய்ய வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்  -  சுக  ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ,  சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ,  சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  கிரகநிலை: ராசியில்  சூர்யன், புதன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -  அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு,  சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் -  செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கிரகநிலை: ராசியில் சுக்ரன், குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு,  சந்திரன் -  லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ,  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வாழ்க்கைத்துணை வழியில் இருந்து உதவிகள் கிட்டும். எதிரிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வீழ்த்துவீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். சொத்து வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9   கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ,  சந்திரன்  -   பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் -  லாப ஸ்தானத்தில்   சுக்ரன், குரு, சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ,  சந்திரன்  -   அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று இரவு 1.06 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று உங்களுடைய தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3  

newstm.in

Trending News

Latest News

You May Like