1. Home
  2. ஜோதிடம்

14-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம்  அதிகமாகும்

14-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம்  அதிகமாகும்

14-11-2019-newstm-dwstm-daily-astrology

14-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம்  அதிகமாகும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி - 28
வியாழக்கிழமை

துவிதியை இரவு 8.33 மணி வரை. பின் திரிதியை
ரோகிணி இரவு 11.57 மணி வரை பின் மிருக சீரிஷம்
மரண யோகம்
நாமயோகம்: பரிகம்
கரணம்: தைதுலம்

அகஸ்: 28.47
த்யாஜ்ஜியம்: 23.56
நேத்ரம்: 2
ஜீவன்: 1
துலா லக்ன இருப்பு (நா.வி): 0.28
சூரிய உதயம்: 6.12


ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருஇந்துளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் திருக்கல்யாணம். இரவு வெள்ளி ரதம்.
மாயவரம் கௌரிமாயூரநாதர் ஏகாந்த மஞ்சத்தில் பவனி.

திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

சூரியன் விசாகம் 3ம் பாதம் - நீசம்
சந்திரன் ரிஷபம் - உச்சம்
செவ்வாய் சித்திரை 3ம் பாதம் - நட்பு
புதன் சுவாதி 2ம் பாதம் - நட்பு
குரு மூலம் 1ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் கேட்டை 1ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று கணவன், மனைவிக் கிடையே  மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள்வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9  கிரகநிலை: ராசியில் சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்   குரு, சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவரும் திறமை உங்களுக்கு உண்டாகும். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3  கிரகநிலை: ராசியில்   ராஹூ -    பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சுக்ரன்  -   களத்திர ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  அயன, சயன, போக  ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று  உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்:  4, 6  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - லாப ஸ்தானத்தில் சந்திரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் நல்ல லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். வருமானம்  அதிகமாகும். பெண்கள் எந்த காரியத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்   சுக்ரன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -  தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன் - லாப ஸ்தானத்தில்    ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம்  உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   சூர்யன், புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சுக்ரன்   -  சுக  ஸ்தானத்தில்   குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் -  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம்  உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7  கிரகநிலை: ராசியில்  செவ்வாய்,  புதன் , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரி யங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும் அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5  கிரகநிலை: ராசியில் சுக்ரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்  - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் -  சூர்யன்,  புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5  கிரகநிலை: ராசியில் குரு, சனி , கேது - ரண, ருண, ஸ்தானத்தில்  சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில்   ராஹு -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய், சூர்யன்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணம் சம்பாதிக்கும்  திறமையை அதிகப்படுத்துவீர்கள். தடைபட்டு வந்த சுப காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  - ரண, ருண , ஸ்தானத்தில்   ராஹூ -   தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய், சூர்யன்,   புதன் -  லாப ஸ்தானத்தில் சுக்ரன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்   குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகும். இந்த நேரத்தில் வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கிரகநிலை: சுக  ஸ்தானத்தில் சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,  சூர்யன், புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  , குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.   அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ  -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் தீர்க்கமான எண்ணத்துடன் செயல்படுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9    

newstm.in

Trending News

Latest News

You May Like