1. Home
  2. ஜோதிடம்

14-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கூடுதல்  பொறுப்புகள் உண்டாகலாம்.

14-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கூடுதல்  பொறுப்புகள் உண்டாகலாம்.

14-09-2019-newstm-daily-astrology

14-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கூடுதல்  பொறுப்புகள் உண்டாகலாம்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

14-Sep-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது ஆவணி - 28
சனிக்கிழமை

பௌர்ணமி காலை 10.21 மணி வரை. பின் பிரதமை
பூரட்டாதி இரவு 11.53 மணி வரை பின் உத்திரட்டாதி
மரண யோகம்
நாமயோகம்: சூலம்
கரணம்: பவ

அகஸ்: 30.12
த்யாஜ்ஜியம்: -
நேத்ரம்: 2
ஜீவன்: 1
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.41
சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: காலை 9.00 - 10.30
எமகண்டம்: மதியம் 1.30 - 3.00
குளிகை: காலை 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
கரிநாள்.
உமாமகேஸ்வர விரதம்.
குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: மகம், பூரம்
சூரியன்
பூரம் 4ம் பாதம் - ஆட்சி
சந்திரன்
கும்பம் - பகை
செவ்வாய்
பூரம் 3ம் பாதம் - பகை
புதன்
ஹஸ்தம் 1ம் பாதம் - ஆட்சி - உச்சம்
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
உத்திரம் 3ம் பாதம் - நீசம்
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் புதன், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல்  பணியாற்ற  வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு,  ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.  பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7மிதுனம்: கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.    இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில்  செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது. வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.புதிய சொத்து வாங்கும் தருணமிது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5கடகம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுத்தம், சுகாதாரம் என்பதில் கவனமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சுப விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5 சிம்மம்: கிரகநிலை: ராசியில்  சூர்யன், செவ்வாய்  -  குடும்ப ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3கன்னி: கிரகநிலை: ராசியில் புதன்,  சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்  ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9துலாம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது- பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சிலர் மேலதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று சேர்வர்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9மகரம்: கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்-  லாப ஸ்தானத்தில்  குரு- அயன சயன போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்வீர்கள். அதேநேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது.வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கும்பம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இன்று பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 05:14 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார். பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல்  பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம் அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like