1. Home
  2. ஜோதிடம்

14-10-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

14-10-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

14-10-2020 - தினப்பலன்: இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

இன்று கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

இன்று பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

இன்று தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

இன்று பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டிய நாள். பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளில் உங்களுடைய சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் சச்சரவுகளை நீக்கலாம். ஆசையைக் குறைத்துக் கொண்டு அன்றாடப் பணிகளை சரிவர செய்து வந்தாலே நல்லவிதமான அனுகூலங்கள் உங்களை வந்து சேரும். தாம்பத்தியத்தில் சிக்கல்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

இன்று அகலக்கால் வைத்தால் அவதி நிச்சயம். ஆனாலும் தேவைக்கேற்ற பணவரவு உங்களை வந்து சேரும். எதிர்காலத்திற்குத் தேவையான உபயோகமுள்ள பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பகைவர்கள் உங்களுக்கு பணியக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வீடு நிலம் இருந்தால் அது வெற்றி பெறும் முகநிலை உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும். முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

இன்று நன்மைகளை அனுபவம் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள். உறவினரால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளில் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பாக அமையும். தாம்பத்தியம் சகஜநிலையில் இருந்து வரும். அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் குருவின் இருப்பால் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. எல்லா நன்மைகளும் வந்து சேரும். மனோதிடம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

இன்று நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Trending News

Latest News

You May Like