1. Home
  2. ஜோதிடம்

13-8-2018 - தினப்பலன்: வாரத்தின் முதல்நாள் எப்படி இருக்கும்?

13-8-2018 - தினப்பலன்: வாரத்தின் முதல்நாள் எப்படி இருக்கும்?

13-8-2018-newstm-daily-free-astrology

13-8-2018 - தினப்பலன்: வாரத்தின் முதல்நாள் எப்படி இருக்கும்?

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I க்ரீஷ்மருது I ஆடி 28 I இங்கிலீஷ்: 13 August 2018 I திங்கள்கிழமை

துவிதியை பகல் 11.58 மணி வரை. பின் திரிதியை I பூர ம் இரவு 11.24 மணி வரை. பின் உத்திரம்

பரிகம் நாமயோகம் I கௌலவம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 5.18

அகசு: 30.56 I நேத்ரம்: 0 I ஜீவன்: 1/2 I கடக லக்ன இ ருப்பு: 6.22 I சூர்ய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 7.30 - 9.00 I எமகண்டம்: காலை 10.30 - 12.00 I குளிகை: மதியம் 1.30 - 3.00 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்

குறிப்பு: இன்று கீழ்நோக்கு நாள் I திருஆடிப்பூரம் I இ ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கு, கன்னிப்பெண்கள் பூஜை

திதி: திரிதியை I சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

உங்கள் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! ஞாயிறு முதல் சனி வரை..!

மேஷம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தானதர்மம் செய்யவும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்குக் காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்களைத் தெரிந்தகொள்ள கிளிக் செய்யுங்கள்...ரிஷபம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், ராகு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகப் பணிகளைக் கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவி கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்குத் திருப்தி அளிப்பதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மிதுனம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்குக் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5கடகம் கிரகநிலை: ராசியில் சூர்யன்,புதன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று தடைகளைத் தாண்டி செய்யும் முயற்சி வெற்றி பெறும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9சிம்மம் கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்குக் காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுப் பின்னர்ச் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கன்னி கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவி கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுக ளில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. தேவையற்ற சில காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று திறமை வெளிப்படும். எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று அக்கம்பக்கத்தினரிடம் சண்டைகள் ஏற்பட்டுச் சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். .அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 இதைப் படிச்சீங்களா? கருணாநிதிக்கு இடமில்லை என்றது எடப்பாடியின் சாணக்கியத்தனமா?மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல்அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றைக் கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5கும்பம் கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7மீனம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன்,புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது எனக் கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: இன்று வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றைத் தவிர்த்து உங்கள் கடமைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பக் கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like