13-09-2018 தினப்பலன் - விநாயகர் அருளால் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும் நாள் இன்று!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன்கள் மற்றும் பஞ்சாங்கம்!

13-09-2018 தினப்பலன் - விநாயகர் அருளால் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும் நாள் இன்று!
X

13-09-2018-newstm-daily-free-astrology

13-09-2018 தினப்பலன் - விநாயகர் அருளால் தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும் நாள் இன்று!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

வாசகர்கள் அனைவருக்கும் நியூஸ்டிஎம்-ன் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I ஆவணி 28 I இங்கிலீஷ்: 13 September 2018 I வியாழக்கிழமை

சதுர்த்தி மாலை 6.59 மணி வரை. பின் பஞ்சமி I சுவாதி மறு நாள் காலை 5.35 மணி வரை. பின் விசாகம்

ப்ராம்மம் நாமயோகம் I வணிஜை கரணம் I அமிர்த யோகம் I தியாஜ்ஜியம்: 12.19 I அகசு: 30.14

நேத்ரம்: 0 I ஜீவன்: 1/2 I சிம்ம லக்ன இருப்பு: 6.22 I சூர் ய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30 I குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு: இன்று சமநோக்கு நாள் I சதுர்த்தி விரதம் I கரிநாள் I திருவலஞ்சுழிஸ்ரீசுவேத விநாயகர் ரதோற்சவம் I விநாயகர் சதுர்த்தி

திதி: சதுர்த்தி I சந்திராஷ்டமம்: ரேவதி

விநாயக சதுர்த்தி: எந்த நட்சத்திரகாரர், எப்படி வழிபட வேண்டும்?

மேஷம்:  கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்த ஒரு ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். இந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களைப் படிக்க கிளிக் செய்யுங்கள்...ரிஷபம்:  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். குடும்பத்தில் உறவுகளுக்கிடையே சிறிய மனக்கிலேசங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம். சகோதரர் வழியில் ஆதாயம் உண்டு. உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வார். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9  ரூ.5 கோடி ஓ.கே-வா?: கன்னியாஸ்திரியிடம் பேரம் பேசிய பிஷப்!  மிதுனம்:  கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர சகோதரி வழியில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். தூரத்திலிருந்து வரும் செய்திகளால் குடும்ப உறவுகளுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அனைவரும் ஒன்றாக சுற்றுலா சென்று வருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9கடகம்:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேதுஎன கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். குடும்பத்தில் பெரியோர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சொத்து விவாகாரங்கள் தொடர்பான பேச்சுகளை சற்று தள்ளிப்போடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 நியூஸ்டிஎம்-ன் இன்றைய டாப் 10 செய்திகள்!சிம்மம்:  கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று அடுத்தவரை அனுசரித்து செல்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் இராது. இல்லத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் தாராளமாக கிட்டும். சகோதர - சகோதரி வகையில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தாயின் ஆதரவு பெருகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5கன்னி:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான முயற்சிகளில் இறங்கலாம். கணவன் - மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளர் ஆகலாம் - மோஜோ 20  - ஐபோன் நிருபர் அகஸ்டின் பற்றி தெரியுமா?துலாம்:  கிரகநிலை: ராசியில் குரு, சுக்ரன், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7விருச்சிகம்:  கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். குடும்பத்தில் வெற்றி செய்தியை கேட்க முடியும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.  எதிர்பார்த்த வகையில் செலவுகள் அதிகரித்து காணப்படும். சகோதர வழிகளிலிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9     உங்கள் நட்சத்திரத்தை வைத்தே நீங்க எப்படிபட்டவர் என்று சொல்லலாம்! - பகுதி 1 உங்கள் நட்சத்திரத்தை வைத்தே நீங்க எப்படிபட்டவர் என்று சொல்லலாம்! - பகுதி 2தனுசு:  கிரகநிலை: ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3மகரம்:  கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆசி கிட்டும்.  சிக்கன நடவடிக்கைகளை குடும்பத்தில் மேற்கொள்வீர்கள். உறவினர் வருகையால் இல்லம் விழாக்கோலம் பூணும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6  சோகத்திற்கு ஆறுதலாகவும், காயத்திற்கு மருந்தாகவும் இருந்த சொர்ணலதா குரல் - நினைவு நாள் சிறப்புப் பகிர்வுகும்பம்:  கிரகநிலை: களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று எதிர்பார்த்த உதவியும் நன்மைகள் நடக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6மீனம்:  கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. தாங்களே எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

newstm.in

Tags:
Next Story
Share it