1. Home
  2. ஜோதிடம்

(13-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(13-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

(13-07-2020) இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் பொதுபலன்கள்

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன்  -  பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  -   அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கிரகநிலை:

ராசியில்  ராஹூ, புதன், சூர்யன்  -  களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று . குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உறவினரிடையே பேசுவதை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பண வரவில் தடை இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  -  அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ)  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 6

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ, புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று  எதிலும் எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கும். சிலரது செயல் பாடுகள் உங்களுக்கு நன்மையை அளிக்கும். வெற்றியின் அறிகுறிகள் தெரியும். மனம் மகிழ்ச்சியில் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   -  பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  - அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை அகலும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

கிரகநிலை:

ராசியில்  கேது, குரு (வ), சனி (வ)  -  சுக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு, புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று இல்லத்தில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். சிலரின் பிரச்சினைகளை நீங்கள் முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9  

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்   -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சினை அகலும். சிலர் உங்களை பார்த்து பொறாமையில் இருப்பர். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன்  - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்   - லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உற்சாகமாக இருக்க வேண்டிய நாள். அவ்வப்போது அலுப்பு தோன்றும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், சந்திரன்  - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன்  -  சுக ஸ்தானத்தில்  ராஹூ, புதன், சூர்யன்  -  தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.10 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழி தெரியும் நாள். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிடைப்பதற்கான நாள். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

Trending News

Latest News

You May Like