12-7-2018 தினபலன் - பஞ்சாங்கம்! மேஷம் முதல் மீனம் வரை...

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்!

12-7-2018 தினபலன் - பஞ்சாங்கம்! மேஷம் முதல் மீனம் வரை...
X

daily-free-astrology-12-7-2018

12-7-2018 தினபலன் - பஞ்சாங்கம்! மேஷம் முதல் மீனம் வரை...

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது I ஆனி 27 I இங்கிலீஷ்: 11 July 2018 I புதன்கிழமை

த்ரயோதசி பகல் 2.02 மணி வரை. பின் சதுர்த்தசி I மிருகசீரிஷம் இரவு 12.14 மணி வரை. பின் திருவாதிரை

வ்ருத்தி நாமயோகம் I வணிஜை கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 2.14 I அகசு: 31.28

நேத்ரம்: 0 I ஜீவன்: 1/2 I மிதுன லக்ன இருப்பு: 6.22 I சூர்ய உதயம்: 6.00

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00

சூலம்: வடக்கு I பரி காரம்: பால் I குறிப்பு: இன்று சம நோக்கு நாள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.

திதி: திதித்துவயம் I சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

மேஷ ம் கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: கலையார்வம் மிக்க மேஷ ராசியினரே, உங்களுக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை இருக்கும். இன்று புத்திரவழியில் இருந்த கவலைகள் மறையும். கொடுக்கல்-வாங்கல் சரளமானநிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் பிரச்சினைகளின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளின்றி செயல்படமுடியும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்க ள்: 5, 6ரிஷபம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன் : பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனை பெறும் ரிஷப ராசியினரே, இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். பேச்சாளர்கள் மேடைப்பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். உங்களின் தேவைகளும் ஆசைகளும் திருப்திகரமாக நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7மிதுனம் கிரகநிலை: ராசியில் சூர்யன், சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்:  உலக அனுபவ அறிவை பெற்ற மிதுன ராசியினரே, நீங்கள் அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவர். இன்று பெரிய காரியங்களையும் எளிதில் செய்துவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் அனைத்தும் குறையும். நண்பர்கள் மற்றும் உறவி னர்கள் யாவரும் சாதகமாக இருப்பார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கடகம் கிரகநிலை:  ராசியில் ராகு, புதன்( வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: கடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் கடகராசியினரே, இன்று வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் உங்களின் பெயர், புகழ் உயரும். கடன்கள் குறையும். எல்லாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கக்கூடிய உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மறையும். எல்லாவகையிலும் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9சிம்மம் கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய சிம்மராசியினரே, இன்று சிலருக்கு கடல்கடந்து செல்லக்கூடிய வாய்ப்பும் அதன்மூலம் தனலாபமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபரத்தில் அற்புதமான வளர்ச்சி ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சரளமானநிலை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7கன்னி கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: அசத்தலான நடை உடை பாவனையுடன் ஆடம்பரமாக வாழும் கன்னி ராசியினரே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துவழியில் லாபம் கிட்டும். சேமிக்கமுடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7துலாம் கிரகநிலை: ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் துலா ராசியினரே, இன்று சாதகமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3விருச்சிகம் கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை உடைய விருச்சிக ராசியினரே, இன்று கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமான பலனைப் பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9தனுசு கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேதுகளத்திர ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு -என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடைய தனுசு ராசியினரே,  இன்று முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. புத்திரவழியில் வீணான பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். பூர்வீக சொத்துவகையிலும் வீண்விரயங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தாமதமான நிலையே நிலவும். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3மகரம் கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் உடைய மகர ராசியினரே, இன்று நல்லவரன்கள் கிடைப்பதில் தடை ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6கும்பம் கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.  பல ன்: எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றமும் காணும் கும்ப ராசியினரே, இன்று கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடு களால் அபிவிருத்தி குறைவதோடு பொருட்தேக்கமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில்    நிம்மதியற்ற நிலையே தொடரும். எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தைவிட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7மீனம் கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன்( வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. ப லன்: அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்யும் மீனராசியினரே, இன்று உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வேலைச் சுமையால் உடல்நிலை சோர்வடைந்து அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் பதவிகளை தக்கவைத்துக் கொள்ள அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

newstm.in

Tags:
Next Story
Share it