1. Home
  2. ஜோதிடம்

12-09-2018 தினப்பலன் - மூன்று ராசிக்காரர்களுக்கு வெற்றி வீட்டுக் கதவைத் தட்டும்!

12-09-2018 தினப்பலன் - மூன்று ராசிக்காரர்களுக்கு வெற்றி வீட்டுக் கதவைத் தட்டும்!

12-09-2018-newstm-daily-free-astrology

12-09-2018 தினப்பலன் - மூன்று ராசிக்காரர்களுக்கு வெற்றி வீட்டுக் கதவைத் தட்டும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன்கள் மற்றும் பஞ்சாங்கம்!

ளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I ஆவணி 27 I இங்கிலீஷ்: 12 September 2018 I புதன்கிழமை

திரிதியை இரவு 7.41 மணி வரை. பின் சதுர்த்தி I சி த்திரை மறு நாள் காலை 5.23 மணி வரை. பின் சுவாதி

சுப்ரம் நாமயோகம் I தைதுலம் கரணம் I சித்த யோகம் I தியாஜ்ஜியம்: 18.38 I அகசு: 30.15

நேத்ரம்: 0 I ஜீவன்: 1/2 I சிம்ம லக்ன இருப்பு: 6.26 I சூர்ய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00 I சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு: இன்று சமநோக்கு நாள் I பிள்ளையார்ப ட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் மாலை திருத்தேரில் திருவீதிவுலா சந்தனக்காப்பு. I சுபமுகூர்த்தம்

திதி: திரிதியை I சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களைப் படிக்க கிளிக் செய்யுங்கள்...

மேஷம்:   எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே! இன்று திட்டமிடுவதில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5ரிஷபம்: எதையும் திட்டமிட்டு செய்து முடிக்க கூடிய திறமை உடைய ரிஷப ராசியினரே! இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது  சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.  அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 குளிச்சு முடிச்சதும் தலையைத் துவட்டக்கூடாது ஏன் தெரியுமா?மிதுனம்:  அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும் மிதுன ராசியினரே! இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9கடகம்:  எதையும் ஆழமாக யோசித்து திறமை யுடன் செய்து முடிக்கும் கடக ராசியினரே! இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். குழந்தைகள் மேல்கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். உத்யோகம் தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 இயற்கையைக் காக்கும் இரட்டைப் பிள்ளையார்!சிம்மம்:  பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும் செய்து முடிக்கும் சிம்ம ராசியினரே! இன்று ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுங்கள். சொத்து சார்ந்த விஷயங்களில் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கன்னி:  வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை அனுபவமாக எடுத்துக் கொள்ளும் திறமை உடைய கன்னி ராசியினரே! இன்று வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மோஜோ 17 | மக்கள் கதைகளை தேடி சைக்கிளில் செல்பவர்!துலாம்:  வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும், தயங்காத துலா ராசியினரே! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 இன்றைய டாப் 10 செய்திகள்: பெட்ரோல் விலை உயர்வு முதல் செக்கச்சிவந்த வானம் ரிலீஸ் வரை!விருச்சிகம்:  விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த விருச்சிக ராசியினரே! இன்று கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5தனுசு:  திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் தனுசு ராசியினரே! இன்று போட்டிருந்த திட்டங்களை நிதானமாக செய்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் வழி தனி வழி என்று செயல்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 உங்கள் நட்சத்திரத்தை வைத்தே நீங்க எப்படிபட்டவர் என்று சொல்லலாம்! - பகுதி 1 உங்கள் நட்சத்திரத்தை வைத்தே நீங்க எப்படிபட்டவர் என்று சொல்லலாம்! - பகுதி 2மகரம்:  பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் குணமுடைய மகர ராசியினரே! இன்று நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 கும்பம்:  வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய கும்பராசியினரே! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 துட்டு இல்லாம பப்பு வேகாகது... ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்த துரைமுருகன்!மீனம்:  எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றிபெறும் மீன ராசியினரே! இன்று தம்பதிகளிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like