1. Home
  2. ஜோதிடம்

12-07-2019 - தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

12-07-2019 - தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

12-07-2019-newstm-dialy-rasipalan

12-07-2019 - தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

12-Jul-19 விகாரி வருஷம்
உத்தராயணம் க்ரீஷ்மருது
ஆனி - 27 வெள்ளிக்கிழமை

ஏகாதசி மறு நாள் காலை 3.14 மணி வரை. பின் துவாதசி
விசாகம் இரவு 7.09 மணி வரை பின் அனுஷம்
சித்த யோகம்
நாமயோகம்: ஸாத்யம்
கரணம்: வணிஜை

அகஸ்: 31.27
த்யாஜ்ஜியம்: 42.51
நேத்ரம்: 2
ஜீவன்: 0
மிதுன லக்ன இருப்பு (நா.வி): 0.52
சூரிய உதயம்: 6.00


ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மதியம் 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.

ஸமார்த்த ஏகாதசி. கோ பத்ம விரதம் ஆரம்பம். கோவர்த்தன விரதம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் தங்கப் பல்லக்கு. அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப்பல்லக்கில் பவனி. இரவு சுவாமி குதிரை வாகனத்திலும் பவனி.

திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி

சூரியன் புன்ர்பூசம் 2ம் பாதம் - பகை
சந்திரன் துலாம் - பகை
செவ்வாய் பூசம் 3ம் பாதம் - நீசம்
புதன் திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
குரு கேட்டை 2ம் பாதம் - பகை
சுக்ரன் திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு புனர்பூசம் 1ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 3ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - சுகஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6  ரிஷபம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  மிதுனம்: கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  கடகம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய் - சுகஸ்தானத்தில் சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று திட்ட மிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். . அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  சிம்மம்: கிரகநிலை: தைரிய வீரிய  ஸ்தானத்தில் சந்திரன்  - சுகஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும்  போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  கன்னி: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுகஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய்-   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  துலாம்: கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும். பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்வீர்கள். பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9       தனுசு: கிரகநிலை: ராசியில் சனி (வ), கேது - களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சந்திரன்  - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  மகரம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பேச்சை குறைத்து செயலில்  ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பண உதவி வந்து சேரும். எதிலும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  மீனம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன், ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6  

newstm.in

Trending News

Latest News

You May Like