1. Home
  2. ஜோதிடம்

12-03-2020 இன்றைய தினப்பலன்

12-03-2020 இன்றைய தினப்பலன்

12-03-2020 இன்றைய தினப்பலன்

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில் ராஹூ -  ரண, ருண  ஸ்தானத்தில் சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது -   லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 9.55 மணிக்கு சந்திர  பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிலும் நிதானமாக செயல்படுவதுடன் அடுத்தவரின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது நல்லது. எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். இருப்பினும் அஷ்டம சனியால் மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக  செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

12-03-2020 இன்றைய தினப்பலன்

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ -  பஞ்சம  ஸ்தானத்தில் சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி, கேது  - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன், புதன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.55 மணிக்கு சந்திர  பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான  வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும்.  செலவும் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கிரகநிலை:

ராசியில்  ராஹூ -  தைரிய  ஸ்தானத்தில்  சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன் -  பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் -  லாப  ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 2, 9

கிரகநிலை:

குடும்ப  ஸ்தானத்தில்  சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில்  புதன் - அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன்  -  தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.   வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 6

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில்  புதன்  - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் -  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.  குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் புதன்  -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்  -  அஷ்டம  ஸ்தானத்தில் சுக்ரன் -   தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பிள்ளைகள்  துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.  எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.   உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9,3

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது - சுக  ஸ்தானத்தில் புதன்  -  பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன்  -  களத்திர  ஸ்தானத்தில்  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ -  லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து செல்வது நன்மைதரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.    வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 3, 7

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு, சனி , கேது  -  தைரிய ஸ்தானத்தில்  புதன்  -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில்  சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்   ராஹு - தொழில்  ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.   கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  கவனமாகவும் கடினமாகவும் உழைப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன்  - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் -  பஞ்சம  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்    ராஹு -  பாக்கிய   ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வீண் அலைச்சலும், காரிய தடையும் ஏற்படலாம் கவனம் தேவை.  குல தெய்வத்தை  பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனவருத்தம் நீங்கும்.  மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து   முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4, 5

கிரகநிலை:

ராசியில்  புதன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் -  சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் -  ரண, ருண  ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன் -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.  நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம்  முன்னேற்ற மடையும்.  போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 7

கிரகநிலை:

ராசியில்  சூர்யன் -  தைரிய ஸ்தானத்தில்  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய், குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில்  புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 2, 3

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ -  ரண, ருண  ஸ்தானத்தில்  சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு, சனி , கேது -  லாப ஸ்தானத்தில்  புதன்  -  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 7.36 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Trending News

Latest News

You May Like