12-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்

12-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும்.
X

12-03-2019-newstm-daily-astrology

12-03-2019- தினப்பலன். இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விளம்பி வருஷம் | க்ஷிணாயணம் | சிசிரருது
12 March 2019 | மாசி - 28 | செவ்வாய்கிழமை

ஷஷ்டி இரவு 12.39 மணி பின்னர் ஸப்தமி
கிருத்திகை இரவு 2 மணி வரை பின் ரோஹிணி
சித்த யோகம் | வைதிருதி நாமயோகம் | கௌலவம் கரணம்

அஹஸ்: 29.47 | தியாஜ்ஜியம்: 18.54 | நேத்ரம்: 1 | ஜீவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு (நா.வி) - 0.23
சூர்ய உதயம் - 6.26 | சூர்ய அஸ்தமனம் - 6.21

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30 | சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு: இன்று கீழ் நோக்கு நாள்.
ஷஷ்டி விரதம்.
கார்த்திகை விரதம்.
காஞ்சிபுரம் சிவபெருமாள் உற்ஸவாரம்பம்.
மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணாவதாரம்.நத்தம் ஸ்ரீமாரியம்மன் உற்ஸவாரம்பம்.

திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

கிரகம் பாத சாரம் நிலை
சூரியன் பூரட்டாதி 3ம் பாதம் நட்பு
சந்திரன் ரிஷபம் உச்சம்
செவ்வாய் பரணி 4ம் பாதம் ஆட்சி
புதன் சதயம் 3ம் பாதம் நட்பு
குரு கேட்டை 4ம் பாதம் பகை
சுக்கிரன் திருவோணம் 3ம் பாதம் நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் நட்பு
ராகு புனர்பூசம் 3ம் பாதம் நட்பு
கேது உத்தராடம் 1ம் பாதம் நட்பு

இன்று எதிலும் நிதானமாக செயல்படுவதுடன் அடுத்தவரின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது நல்லது. எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். இருப்பினும் அஷ்டம சனியால் மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக  செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9இன்று திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம்  கோபமான  வார்த்தைகளை பேசாமல்  சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும்.  செலவும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக  பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை  தவிர்ப்பதும் நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9இன்று கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து  செல்வது நல்லது. பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை  குறைப்பது நல்லது. பிள்ளைகள் கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பார்கள்.   அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7இன்று பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.   அறிவுத் திறன் கூடும். வீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம்.   காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டுபின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம்.  வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5இன்று குடும்ப வாழ்க்கையில்  சுகமும், நிம்மதியும் கிடைக்கும். பதவி மாற்றம்,  இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகலாம். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சிறு குழப்பங்களையும்  ஏற்படுத்தி வருவார்.   மனகஷ்டம், பணகஷ்டம் தீரும். உடல் ஆரோக்யம்  உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7இன்று சொல்லாற்றலும் செயலாற்றலும் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். தடைபட்ட  காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்கள் அவ்வப்போது வந்தாலும் முடிவில் தெளிவு  உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட  வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன  விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள்  கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  இன்று தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9இன்று உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே  வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம்  காட்டுவீர்கள். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5இன்று கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு உதவும். வேலையை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. எந்த வேலையையும் திட்டமிட்டு செய்வது நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அவை நீங்குவதுடன் உடல்  ஆரோக்கியமும் அடையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9இன்று கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும்.  சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.   எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. எதிரிகள்  தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

newstm.in

Tags:
Next Story
Share it