10-7-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய newstm.in வாழ்த்துக்கள்!

10-7-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்!
X

daily-free-astrology-10-7-2018

10-7-2018 தினப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது I ஆனி 26 I இங்கிலீஷ்: 10 July 2018 I செவ்வாய்க்கிழமை

துவாதசி மாலை 4.06 மணி வரை. பின் த்ரயோதசி I ரோகிணி இரவு 1.37 மணி வரை. பின் மிருகசீரிஷம்

கண்டம் நாமயோகம் I தைதுலம் கரணம் I அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 29.59 I அகசு: 31.28 I நேத்ரம்: 0 I ஜீவன்: 1/2 I மிதுன லக்ன இருப்பு: 6.26 I சூர்ய உதயம்: 6.00

ராகு காலம்: மதியம் 3.00 - 4.30 I எமகண்டம்: காலை 9.00 - 10.30 I குளிகை: மதியம் 12.00 - 1.30

சூலம்: வடக்கு I பரிகாரம்: பால் I குறிப்பு:இன்று மேல் நோக்கு நாள்

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீ சிவபெருமான் பவனி.

திதி: துவாதசி I சந்திராஷ் டமம்: சுவாதி, விசாகம்

மேஷம்   கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்:  நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்தும் மேஷ ராசி அன்பர்களே,  இன்று மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9ரிஷபம்   கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ் தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன. ப லன்:  "எருதொடு மாறேல்" என்ற கூற்றுப்படி - எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப ராசி அன்பர்களே, இன்று உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9மிதுனம்   கிரகநிலை: ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன் :  மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன இராசி அன்பர்களே, இன்று தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும். நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6கடகம்   கிரகநிலை: ராசியில் ராகு, புதன் - ( வ.ஆ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. ப லன்:  எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே, இன்று சமுதாயத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குழப்பவாதிகளையும், அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7சிம்மம்   கிரகநிலை: ராசியில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்:  அதிகாரமும் தோரணையும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே,இன்று அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். உங்களின் நினைவாற்றம் அதிகரிக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாள். பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கன் னி   கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. ப ல ன்:  எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இன்று தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்து கோரிக்கைகள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். தொழிலில் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.  அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9துலாம்   கிரகநிலை: ராசியில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்:  மற்றவர்கள் கூறும் குறைகளை பற்றி கவலைப்படாமல் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றலுடைய துலாராசி அன்பர்களே, இன்று கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும். பயணங்கள் ஓரளவு நன்மையே தரும் என்பதால் அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். மற்றபடி செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். மேலும் செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7விருச்சிகம்   கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்:  வார்த்தைகளை அளந்து பேசுவது போல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இன்று வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7தனுசு   கிரகநிலை: ராசியில் சனி (வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்:  எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3மகரம்   கிரகநிலை: ராசியில் செவ்வாய் ( வ), கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன் :  எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படும் மகர ராசி அன்பர்களே, இன்று அசையாச்சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று லாபமடைவீர்கள். நன்மைகள் கிடைக்கக் கூடிய நாள். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9கும்பம்   கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பல ன்:  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடைய கும்பராசி அன்பர்களே, இன்று உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்னை கட்டுக்குள் அடங்கி இருக்கும். தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3மீனம்   கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, புதன் - ( வ.ஆ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் ( வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன் :  நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன ராசி அன்பர்களே, இன்று வருமானம் நன்றாக இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வீர்கள். இதனால் அவர்களின் மனக்கசப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it