1. Home
  2. ஜோதிடம்

10-10-2018 தினப்பலன் - முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் வெற்றிகள் கிட்டும் நாள்

10-10-2018 தினப்பலன் - முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் வெற்றிகள் கிட்டும் நாள்

10-10-2018-newstm-daily-free-astrology

10-10-2018 தினப்பலன் - முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் வெற்றிகள் கிட்டும் நாள்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I தக்ஷிணாயணம் I வர்ஷருது I புரட்டாசி 24I இங்கிலீஷ்: 10October 2018 புதன்கிழமை

பிரதமை காலை 8.41 மணி வரை. பின் துவிதியை I சித்திரை பகல் 1.03 மணி வரை. பின் சுவாதி

வைத்ருதி நாமயோகம் I பவம் கரணம் I சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 31.28 I அகசு: 29.35 I நேத்ரம்: 0 I ஜீவன்: 0 I கன்னி லக்ன இருப்பு: 6.36 I சூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 I எமகண்டம்: காலை 7.30 - 9.00 I குளிகை: காலை 10.30 - 12.00

சூலம்: வடக்கு I பரிகாரம்: பால்

குறிப்பு:இன்று சமநோக்கு நாள் I சந்திர தரிசனம் I நவராத்திரி ஆரம்பம் I
திருக்குற்றாலம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.

நவராத்திரி ஸ்பெஷல் - நவராத்திரி மஹோற்சவம் தோன்றியது இப்படித்தான்!

மேஷம்: கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், புதன், சந்திரன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது  துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும்.  ஆனால் செலவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம்  சாதூரியமாக பேசுவதன் மூலம் வளர்ச்சி காண முடியும்.   அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9ரிஷபம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன், புதன், சந்திரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக வெளியில் செல்லும் போது கவனமாக  இருப்பது நல்லது. குடும்பத்தில்  அமைதி காணப்படும். குடும்ப அங்கத்தினர்களை அனுசரித்து செல்வதால் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9மிதுனம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சுக்ரன், புதன், சந்திரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில்  சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்கள் மூலம் காரிய பலிதம் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பணவரத்து திருப்தி தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் சாதிப்பீர்கள். மாணவர்கள் உயர்கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  வீண் அலைச்சலாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்க்ன் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 நவராத்திரியின்போது கொலு வைப்பது எதற்காக?கடகம்: கிரகநிலை: ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் -  சுக ஸ்தானத்தில்  சுக்ரன், புதன், சந்திரன்  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தர்ம சிந்தனையுடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு சின்ன வேலையை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  பணவரத்து தாமதப்படும். மனதில் வீண் கவலை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9சிம்மம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், புதன், சந்திரன்  - சுகஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் தடைகளை தாண்டி முன்னேற்றங்களை காண்பீர்கள்.  போட்டிகள் இருந்தாலும் அவற்றால் பாதிப்பு இருக்காது. எதிலும் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலைகளை செய்து முடிப்பதற்கு  கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 கன்னி: கிரகநிலை: ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், புதன், சந்திரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு விலகும். வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம்.  மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்கும் மனோதைரியம் உண்டாகும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ஏன் தெரியுமா? - வடக்கே தலை வைத்து படுக்க கூடாதா?துலாம்: கிரகநிலை: ராசியில் சுக்ரன், புதன், சந்திரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வழக்கத்தை விட கூடுதலாக செலவு செய்ய நேரிடும். பணவரத்து தாமதப்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற  கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வருமானம் அதிகமாகும். முன்னோர்கள் வழிபாடு நன்மையைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3விருச்சிகம்: கிரகநிலை: ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி -  தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், புதன், சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். எவ்வளவுதான் திறமையாக செயலாற்றினாலும் மற்றவர்களிடம்  இருந்து பாராட்டு கிடைப்பது அரிது. தூக்கம் குறையலாம். கனவு தொல்லையும் ஏற்படக்கூடும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6தனுசு: கிரகநிலை: ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், புதன், சந்திரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர் விஷயங்கள் தாமதமாகும். அடுத்தவரை நம்பி  பொறுப்புகளை ஒப்படைக்கும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் அதிக அலைச்சலுக்கு பின்னரே செய்து முடிக்க  முடியும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது தடைபடும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 உங்கள் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்!மகரம்: கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன், புதன், சந்திரன்  - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நீங்கள் சொல்வதை யாரும் கேட்காமல் அவர்கள் நினைத்தபடி நடக்க முற்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.  பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7கும்பம்: கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன், புதன், சந்திரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வீண் குழப்பங்கள் ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காரியதாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும் எதிர்கால உயர்கல்வியை நன்கு கற்கவும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6மீனம்: கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், புதன், சந்திரன்  - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.  பலன்: இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்பட்டு மறையும். புதிய முயற்சிகளை கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

newstm.in

Trending News

Latest News

You May Like